ஆற்றுச் சூழல்மண்டலம் (River ecosystem) என்பது, இயற்கைச் சூழலில் இயங்குகின்ற ஆறு ஒன்றின் சூழல்மண்டலம் ஆகும். இது, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகியவற்றுக்கு இடையிலான இடைவினைகளையும், உயிரற்ற பௌதீக, வேதி இடைவினைகளையும் உள்ளடக்கும்.[1][2]
ஆற்றுச் சூழல்மண்டலம், ஓடுநீர்ச் சூழல்மண்டலத்துக்கான முதன்மை எடுத்துக்காட்டு ஆகும். ஓடுநீர்ச் சூழல்மண்டலங்களுள் சில சதமமீட்டர்களே அகலமான நீரோடைகள் முதல் கிலோமீட்டர்க் கணக்கில் அகலம் கொண்ட பெரிய ஆறுகள் வரை உள்ளடங்குகின்றன.[3] ஓடுநீர்ச் சூழல்மண்டலங்கள் ஒப்பீட்டளவில் தேங்கி நிற்கும் ஏரிகள், குளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேங்குநீர்ச் சூழல்மண்டலங்களில் இருந்து வேறுபட்டவை. இவ்விரண்டு வகைகளும் சேர்ந்து நன்னீர்ச் சூழல்மண்டலம் அல்லது நீர்ச் சூழல்மண்டலம் என அழைக்கப்படுகின்றன.
ஓடும் நீர் சூழலின் பின்வரும் இயல்புகள், பிற நீர்ச் சூழல் வாழிடங்களில் இருந்து தனித்துவமானவை.