ஆலத்தூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஏழு இடம்பெற்றுள்ளன. அவற்றில் இவர் சோழ அரசர்கள் மூவரைக் குறிப்பிட்டுள்ளார்.
சேட்சென்னி நலங்கிள்ளி,
சோழன் நலங்கிள்ளி,
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
ஆகியோர் அந்த அரசர்கள்.
இவர் ஆலத்தூர் என்னும் ஊரிலிருந்த வேளாளார் போலும். இவர் கடைச் சங்கத்தவர். இவர் சோழன் நலங்கிள்ளியின் படைப்பெருக்கினைக் காண்கையில் படைசெல்லும் வழியிலுள்ள பனை மரங்களின் நுங்குகளைத் தலைப்படையும், பழங்களை இடைப்படைகளும், அப்பழங்களின் கொட்டைகளாலாகிய கிழங்குகளைக் கடைப்படைகளும் நுகர்ந்து சென்றன எனத்தமிழரசன் படைமிகுதி கூறினார். “தலையோர் நுங்கின தீஞ்சாறு மிசைய, இடையோர் பழத்தின்பைங்கனிமாந்தக், கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர”(புறம்-312) எனக் கூறினார்.[1]
குறுந்தொகை 112, 350
புறநானூறு 34[2], 36[3], 69[4], 225, 324