ஆலன் நினைவு மருத்துவ நூலகம் Allen Memorial Medical Library | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
ஆலன் நினைவு நூலகத்தின் முன் முகப்பு
| |
அமைவிடம்: | கிளீவ்லாந்து, ஒகையோ |
ஆள்கூறு: | 41°30′21.44″N 81°36′30.58″W / 41.5059556°N 81.6084944°W |
கட்டிடக்கலைப் பாணி(கள்): |
பாரம்பரிய மறுமலர்ச்சி பாணி[1] |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
1982-11-30[1] |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
82001365[1] |
ஆலன் நினைவு மருத்துவ நூலகம் (Allen Memorial Medical Library) அமெரிக்காவின் ஒகையோ மாநிலம் கிளீவ்லாந்து நகரத்தில் அமைந்துள்ளது. கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக வளாகத்தில் யூக்லிட் அவென்யூவுடன் அமைந்துள்ள இம் மருத்துவ நூலகம் 1926ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தியூட்லி பி. ஆலனின் நினைவாக அவரைச் சிறப்பிக்கும் வகையில் இந்த கட்டடத்திற்கு அவர் பெயரிடப்பட்டது. பாரம்பரிய மறுமலர்ச்சி பாணியில் வாக்கர் மற்றும் வீக்சின் என்ற கிளீவ்லேண்ட் நிறுவனம் இளஞ்சிவப்பு பளிங்கு தளத்தில் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு கட்டடத்தை வடிவமைத்தது.[2] கிளீவ்லேண்ட் நகரத்தின் அடையாளமாகப் புகழ்பெற்றுள்ள இந்நூலகம் தேசிய வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[3] ஒரு நூலகமாகச் செயல்படுவதோடு, கட்டடத்தில் உள்ள 450 இருக்கைகள் கொண்ட அரங்கம், கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்பறையாகவும் செயல்படுகிறது.[4]
கிளீவ்லேண்ட் சுகாதார அறிவியல் நூலகத்தின் ஒரு பகுதியைக் கூடுதலாக கொண்டிருப்பதுடன், மருத்துவ வரலாற்று டிட்ரிக் அருங்காட்சியகத்தின் தாயகமாகவும் இந்நூலகம் உள்ளது.[5] கேசு வெசுடர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கிளீவ்லேண்ட் மருத்துவ நூலகக் கூட்டமைப்பு மூலம் கட்டிடம் நிர்வகிக்கப்படுகிறது.