இரட்டை வெங்காயம்<bp>Twincrest onion | |
---|---|
![]() | |
மலர்கள் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. bisceptrum
|
இருசொற் பெயரீடு | |
Allium bisceptrum S.வாட்சன்[2] | |
வேறு பெயர்கள் [3] | |
|
அல்லியம் பைசெப்ற்றம் '(Allium bisceptrum)' அல்லது இரட்டை வெங்காயம் என்பது மேற்கு ஐக்கிய அமெரிக்க உயர் குத்துயரத் தாயகத் தாவரமாகும். இது கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ, நெவாடா, ஓரிகான், வாசிங்டன், இடாகோ, உட்டா பகுதிகளில் ஈரமான பகுதிகளிலும் நிழற்பகுதிகளிலும் திறந்த புல்வெளிகளிலும் ஆண்டுதோறும் வாழும் உண்ணும் தாவரமாகும்.[4]
சில நேரங்களில் அல்லியம் பைசெப்ற்றம் உணவு வாசனைக்கு பயன்படுகிறது. ஏனெனில் இதன் தாள்கள் மிகவும் வலுவானதாகவும், மணமுடையதாகவும் இருக்கும். இந்தத் தாள்கள் வழிபாடு செய்ய பயன்படுத்தப்படுகின்றது. இப்பகுதியில் பல விலங்குகள், எல்க், கறுப்பு கரடிகள், பிரெய்ரி நாய்கள் உட்பட, பல விலங்குகள் இந்த அல்லியம் பைசெப்ற்றம் என்ற வெங்காயங்களின் குமிழ்களைச் சாப்பிடுகின்றன.[5][6][7]
இரட்டை வெங்காயம் 2000 முதல் 2900 மீ குத்துயர நெடுக்கங்களில் ஆண்டுதோறும் நிலவும் தாவர இனமாகும். இது 10செமீ முதல் 40 செமீ உயரம் வரை வளர்கிறது. வெங்காயக் குமிழ்கள் வட்ட வடிவிலும் முட்டை வடிவிலும் அமைகின்றன. குமிழ்கள் சற்றே சரிந்திருக்கும்; வெட்டினால் காட்டமான மணம் வீசும். பூத்தலைகள் 10முதல் 15 மிமீ நீளத்தில் இருக்கும். மலர்கள் பிங்கு முதல் ஊதா வரை மாறுபடும் நிறச் சாயல்களில் காணப்படும். ஒவ்வொரு பூத்தலையிலும் ஆறு கூர்மடல்களும் கரும்பட்டையும் அமையும். இவற்றின் நீளமான தாள்கள் ஈரிணைகளாக அமையும். பிற வெங்காயத் தாள்களை விடப் பசுமையாக இருக்கும். கீறினால் மணம் வீசும்.[4]
அல்லியம் பைசெப்ற்றம் கலிபோர்னியாவில் கலப்பு ஊசியிலைக் காடுகளில் அல்லது ஈரத் தரைக்காடுகளிலும் ஓடைக் கரைகளிலும் அலையாத்திக் காடுகளிலும் புல்வெளிகளிலும் காணப்படுகின்றன.[4]
கலிபோர்னியாவில், அ. பைசெப்ற்றம் ஆல்பைன், எல்டொராடோ, கிளென், இன்யோ, இலாசன், மெண்டோசினோ, மோனோ, மோடோக், மாரிபோசா, நெவாடா, புளூமாசு, சான் பெர்னார்டினோ, சாந்தியாகோ, சாசுட்டா, சீறா, டிரினிட்டி, துளேர், துவோலும்னே ஆகிய அனைத்து கவுன்ட்டிகளிலும் காணப்படுகின்றன. இ து பரவலாக நெவாடா, ஔட்டா, ஆரிசோனா, தென்கிழக்கு ஓரிகான், தெற்கு இடாகோ, வடக்கு இடாகோ, தென்கிழக்கு வாசிங்டன், பிராங்ளின் கவுன்ட்டியிலும் தனித்தனி திரள்களாகப் பரவியுள்ளன.[4][8]
Notes: Calif