ஆலுக் குறும்பா மொழி

ஆலுக் குறும்பா மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியின் கிழக்குப் பகுதிகள்.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (2,500 காட்டடப்பட்டது: 1997)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3xua


ஆலுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 2,500 பேர்களால் பேசப்படுகிறது. இது, "பால் குறும்பா", "ஹால் குறும்பா", போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஆலுக் குறும்பா, பால் குறும்பா ஆகியன ஏறத்தாழ 80% சொல்லொற்றுமை கொண்ட கிளைமொழிகளாகும். இம்மொழி, இம்மொழி பேசுவோரிடையே அதிகமாகப் பய்ன்படுத்தப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழ் அல்லது கன்னடம் போன்ற மொழிகளையும் பேசக்கூடியவர்களாக உள்ளனர். சொந்த மொழியில் இவர்களது கல்வியறிவு வீதம் 1% இலும் குறைவே. இரண்டாம் மொழியில் 15 - 25% கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.[1] இம்மொழிக்கு எழுத்து கிடையாது.

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]