ஆல் தட் பிரீத்ஸ் | |
---|---|
![]() வெளியீட்டு சுவரிதழ் | |
இயக்கம் | ஷௌனக் சென் |
தயாரிப்பு |
|
இசை | ரோஜர் கௌலா |
ஒளிப்பதிவு |
|
படத்தொகுப்பு | சார்லோட் மன்ச் பெங்சென் |
விநியோகம் |
|
வெளியீடு | சனவரி 22, 2022(சன்டான்ஸ்) அக்டோபர் 21, 2022 (திரையரங்கு) |
ஓட்டம் | 91 நிமிடங்கள் |
நாடு |
|
மொழி | இந்தி |
மொத்த வருவாய் | மதிப்பீடு ஐஅ$100,637[1] |
ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்பது சௌனக் சென் இயக்கி 2022 ஆண்டு வெளியான ஒரு ஆவணப்படமாகும். இது ரைஸ் பிலிம்ஸ் பதாகையின் கீழ் சௌனக் சென், அமன் மான், டெடி லீஃபர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் புதுதில்லியில் காயமுற்ற பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் உடன்பிறப்புகளான முகமது சவுத், நதீம் ஷேஜாத் ஆகியோரை இந்த ஆவணப்படம் பின்தொடர்கிறது.[2]
இத்திரைப்படம் 2022 சனவரி 22, 2022 அன்று சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக திரைப்பட ஆவணப் படப் போட்டியில் கிராண்ட் ஜூரி பரிசை வென்றது. இது சிறப்புத் திரையிடல் பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு இது கோல்டன் ஐ விருதை வென்றது.[3] இது பின்னர் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[4][5]
சௌத், நதீம் ஆகிய இரு முசுலீம் சகோதரர்கள் புது தில்லியில் வாழ்பவர்கள். அவர்கள் ஒரு கரும்பருந்தை நேசிக்கின்றனர். கரும்பருந்தின் நேசம் மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் மாறுகிறது. தில்லியில் காற்று மாசால் பகலிலேயே வானம் இருளடைந்து அதனால் பறவைகள் கீழே விழுவது தொடர் கதையாக உள்ளது. காயமடைந்த அந்த பறவைகளை மீட்டெடுத்து அவற்றை பராமரிப்பதை இந்த இருவரும் தங்கள் வாழ்க்கையின் கடமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.[6]
தில்லியின் வஜிராபாத்தில் பறவைகளுக்கான தற்காலிக மருத்துவமனை நடத்திவருகின்றனர் நதீம் ஷெஹ்சாத், முகமது சவுத் என்ற இரு சகோதரர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் 20,000 பறவைகளை மீட்டு குணப்படுத்தியுள்ளனர். இவர்களின் கதைதான் இந்த ஆவணப்படம். இவர்களின் நோக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஷௌனக் சென் இவர்களின் கதையை படமாக்க முடிவு செய்தார்.[7]
இந்தத் திரைப்படம் 22, சனவரி, 2022 அன்று 2022 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது.[6][8] இது 2022 கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சிறப்புத் திரையிடல்கள்' பிரிவில் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 23 அன்று திரையிடப்பட்டது.[9][10][11]
இப்படம் 46வது ஹாங்காங் சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அங்கு 24 ஆகத்து 2022 அன்று திரையிடப்பட்டு ஃபயர்பேர்ட் விருதை வென்றது.[12] 2022 செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற 18வது சூரிச் திரைப்பட விழாவிற்கு கலந்துகொண்டு, அங்கு அது ஆவணப் போட்டிப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.[13] அதே மாதத்தில், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 16, 2022 வரை நடைபெற்ற 2022 நியூயார்க் திரைப்பட விழாவின் முக்கிய ஸ்லேட்டிலும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[14] இது 27வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவின் 'வைட் ஆங்கிள் - டாக்குமெண்டரி ஷோகேஸ்' பிரிவில் இடம் பெற்று 9 அக்டோபர் 2022 அன்று திரையிடப்பட்டது.[15] அடுத்து 2022 அக்டோபர் 5 முதல் 16 அக்டோபர் வரை நடைபெற்ற பிஎப்ஐ லண்டன் திரைப்பட விழாவில் இது கலந்துகொண்டது. அங்கு ஆவணப் போட்டியில் தி கிரியர்சன் விருதை வென்றது.[16]
இத்திரைப்படத்திற்கான உலகளாவிய தொலைக்காட்சி உரிமையை எச்பிஓ டாக்குமெண்டரி பிலிம்ஸ் கையப்படுத்தியது. பின்னர் அமெரிக்காவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து 7, பிப்ரவரி, 2023 அன்று எச்.பி.ஓ மற்றும் தேலதிக ஊடக சேவையான எச்பிஓ மேக்ஸில் ஒளிபரப்பு துவங்கியது.[17]
விருது | விழா நாள் | வகை | பெறுநர்(கள்) | முடிவு | குறி. |
---|---|---|---|---|---|
சன்டான்ஸ் திரைப்பட விழா | சனவரி 30, 2022 | கிராண்ட் ஜூரி பரிசு - ஆவணப்படம் | ஆல் தட் பிரீத்ஸ் | வெற்றி | [18] |
கான் திரைப்பட விழா | மே 28, 2022 | கோல்டன் ஐ | ஷௌனக் சென் | வெற்றி | [19] |
ஆங்காங் பன்னாட்டு திரைப்பட விழா | ஆகத்து 31, 2022 | ஃபயர்பேர்ட் விருது | ஆல் தட் பிரீத்ஸ் | வெற்றி | [20][21] |
சூரிச் திரைப்பட விழா | அக்டோபர் 2, 2022 | சிறந்த சர்வதேச ஆவணப்படம் | பரிந்துரை | [13] | |
லண்டன் திரைப்பட விழா | அக்டோபர் 16, 2022 | கிரியர்சன் விருது | வெற்றி | [22] | |
மாண்ட்க்ளேர் திரைப்பட விழா | அக்டோபர் 30, 2022 | ஆவணப்படத்திற்கான புரூஸ் சினோஸ்கி விருது | பரிந்துரை | [23] | |
ஆசிய பசிபிக் திரை விருதுகள் | நவம்பர் 11, 2022 | இளம் சினிமா விருது | வெற்றி | [24] | |
விமர்சகர்களின் தேர்வு ஆவணப்பட விருதுகள் | நவம்பர் 13, 2022 | சிறந்த அறிவியல்/இயற்கை ஆவணப்படம் | பரிந்துரை | [25] | |
சிறந்த ஒளிப்பதிவு | பெஞ்சமின் பெர்னார்ட் மற்றும் ரிஜு தாஸ் | பரிந்துரை | |||
கோதம் இன்டிபென்டன்ட் திரைப்பட விருதுகள் | நவம்பர் 28, 2022 | சிறந்த ஆவணப்படம் | ஆல் தட் பிரீத்ஸ் | வெற்றி | [26] |
நேசனல் போர்ட் ஆப் ரிவிவிவ் | திசம்பர் 8, 2022 | முதல் ஐந்து ஆவணப்படங்கள் | வெற்றி | [27] | |
ஐடிஏ ஆவணப்பட விருதுகள் | திசம்பர் 10, 2022 | சிறந்த படம் | வெற்றி | [28] | |
சிறந்த இயக்குநர் | ஷௌனக் சென் | வெற்றி | |||
சிறந்த ஒளிப்பதிவு | பென் பெர்ன்ஹார்ட், ரிஜு தாஸ், சௌம்யானந்தா சாஹி | பரிந்துரை | |||
சிறந்த படத்தொகுப்பு | சார்லோட் மன்ச் பெங்ட்சன், வேதாந்த் ஜோஷி | வெற்றி | |||
வாஷிங்டன் டிசி ஏரியா பிலிம் கிரடிக்ஸ் அசோசியேசன் | திசம்பர் 12, 2022 | சிறந்த ஆவணப்படம் | ஆல் தட் பிரீத்ஸ் | பரிந்துரை | [29] |
டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் | திசம்பர் 19, 2022 | சிறந்த ஆவணப்படம் | 2nd place | [30] | |
பெண் திரைப்பட பத்திரிகையாளர்களின் கூட்டணி | சனவரி 5, 2023 | சிறந்த ஆவணப்படம் | பரிந்துரை | [31] | |
நேசனல் சொசைட்டி ஆப் பிலிம் கிரிடிக்சிஸ் | சனவரி 7, 2023 | சிறந்த புனைகதை அல்லாத திரைப்படம் | 3rd place | [32] | |
சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பிலிம் கிரிடிக்ஸ் சர்கிள் | சனவரி 9, 2023 | சிறந்த ஆவணப்படம் | வெற்றி | [33] | |
சினிமா ஐ ஆனர் | சனவரி 12, 2023 | சிறந்த புனைகதை அல்லாத அம்சம் | ஷௌனக் சென், அமன் மான் மற்றும் டெடி லீஃபர் | வெற்றி | [34] [35] |
சிறப்பான இயக்கம் | ஷௌனக் சென் | பரிந்துரை | |||
சிறப்பான தயாரிப்பு | அமன் மான், ஷௌனக் சென் மற்றும் டெடி லீஃபர் | பரிந்துரை | |||
சிறப்பான ஒளிப்பதிவு | பென் பெர்னார்ட் | வெற்றி | |||
சிறந்த ஒலி வடிவமைப்பு | நிலாத்ரி சேகர் ராய் மற்றும் சுஸ்மித் "பாப்" நாத் | பரிந்துரை | |||
ஆடியன்ஸ் சாய்ஸ் பிரைஸ் | ஆல் தட் பிரீத்ஸ் | பரிந்துரை | |||
த அன்பர்கெட்டபிள்ஸ் | முகமது சவுத் மற்றும் நதீம் ஷெஹ்சாத் | வெற்றி | |||
ஜார்ஜியா திரைப்பட விமர்சகர்கள் சங்கம் | சனவரி 13, 2023 | சிறந்த ஆவணப்படம் | ஆல் தட் பிரீத்ஸ் | பரிந்துரை | [36] |
ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள் சங்கம் | சனவரி 23, 2023 | சிறந்த ஆவணப்படம் | பரிந்துரை | [37] | |
லண்டன் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் | பெப்ரவரி 5, 2023 | ஆண்டின் ஆவணப்படம் | பரிந்துரை | [38] | |
சேட்டலைட் அவார்ட்ஸ் | பெப்ரவரி 11, 2023 | சிறந்த இயங்கு படம் – சிறந்த ஆவணப்படம் | பரிந்துரை | [39] | |
டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா அவார்ட்ஸ் | பெப்ரவரி 18, 2023 | ஆவணப்படங்களில் சிறந்த இயக்குநர் சாதனை | ஷௌனக் சென் | பரிந்துரை | [40] |
புரோடியூசர் கில்ட் ஆஃப் அமெரிக்கா அவார்ட்ஸ் | பெப்ரவரி 25, 2023 | திரையரங்க ஆவணப்பட இயங்குபட சிறந்த தயாரிப்பாளர் | அமன் மான், ஷௌனக் சென் மற்றும் டெடி லீஃபர் | பரிந்துரை | [41][42] |
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் | பெப்ரவரி 19, 2023 | சிறந்த ஆவணப்படம் | ஷௌனக் சென், டெடி லீஃபர், அமன் மான் | பரிந்துரை | [43] |
இண்டிபெண்டட் ஸ்பிரிட் அவார்ட்ஸ் | மார்ச் 4, 2023 | சிறந்த ஆவணப்படம் | ஷௌனக் சென், டெடி லீஃபர், அமன் மான் | பரிந்துரை | [44] |
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கம் | மார்ச் 5, 2023 | ஆவணப்படத்தில் ஒளிப்பதிவில் சிறந்த சாதனை | பென் பெர்ன்ஹார்ட் மற்றும் ரிஜு தாஸ் | வெற்றி | [45] |
அகாதமி விருது | மார்ச் 12, 2023 | சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது | ஷௌனக் சென், அமன் மான் மற்றும் டெடி லீஃபர் | பரிந்துரை | [46] |