ஆல்ஃபிரட் ஆல்பர்ட்டு மார்டினோ (Alfred Albert Martineau) இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1859 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று பிரான்சு நாட்டின் ஆர்டின்சு என்ற நிர்வாகக் கோட்டத்தில் பிறந்தார். ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றாசிரியர் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ பேரரசின் காலனித்துவ நிர்வாகியாக இவர் அறியப்படுகிறார்.
காலனித்துவ விவகாரங்கள் மற்றும் பிரெஞ்சு காலனித்துவ விரிவாக்கத்தின் வரலாறு குறித்து விரிவாக இவர் எழுதினார். குறிப்பாக, முன்னாள் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி கேப்ரியல் அனோட்டாக்சுடன் இணைந்து எழுதிய ஆறு-தொகுதிகளான பிரெஞ்சு காலனிகளின் வரலாறு மற்றும் உலகம் முழுவதும் பிரெஞ்சு விரிவாக்கம் (1930-1934).[1] என்ற நூலைக் குறிப்பிடலாம். 1921 ஆம் ஆண்டில் காலனித்துவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் 1935 ஆம் ஆண்டு வரை காலனித்துவ வரலாற்றைக் கல்லூரி டி பிரான்சில் கற்பித்தார் [2]
இவர் வெளிநாட்டு வரலாற்றின் பிரெஞ்சு சங்கம் என்ற அமைப்பின் நிறுவன உறுப்பினராக இருந்தார். (1912) காலனித்துவ அறிவியல் அகாடமியிலும் இவர் உறுப்பினராக இருந்தார். (1922). [3]
ஆர்பர்ட்டு மார்ட்டினோ 1945 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று காலமானார்.