ஆல்பிரட் இ மான் | |
---|---|
மான், திசம்பர் 2010 | |
பிறப்பு | 1925[1] போர்ட்லன்ட் (ஒரிகன்) |
இறப்பு | பிப்ரவரி 25, 2016 (அகவை 90) லாஸ் வேகஸ் |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | (கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)) |
பணி | தொழில் முனைவர் |
சொத்து மதிப்பு | US $ 1.5 பில்லியன் (திசம்பர் 2015)[2] |
ஆல்பிரட் இ மான் (Alfred E. Mann) (1925 – பிப்ரவரி 25, 2016), ஒரு அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் கொடையாளி ஆவார்.
மான் போர்ட்லண்டில் யூதக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்[3]. மளிகைக் கடைக்காரரான அவரது தந்தை இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்தவர். அவரது தாய் பியானோ இசைக்கலைஞரும் பாடகருமான அவரது தாய் போலந்திலிருந்து புலம் பெயர்ந்தவர்.[4] 1946 இல் மான் லாஸ் ஏஞ்சலசுக்குப் குடிபெயர்ந்தார்.
மான் பல தொழில்களைத் தொடங்கி வெற்றி பெற்றார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டார். இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கான சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு அவசியமான சோலார் பேட்டரிகள் இவரது தயாரிப்புகளுள் ஒன்றாகும். இவர் கொடையாளியாகவும் விளங்கினார்[5].
பிப்ரவரி 25, 2016 இல் ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.