ஆஷிஷ் ஷர்மா | |
---|---|
பிறப்பு | 20-08-1984 ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா |
தேசியம் | இந்தியான் |
பணி | மாடல், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2009 – அறிமுகம் |
சமயம் | இந்து மதம் |
வாழ்க்கைத் துணை | அர்ச்சனா டைடெ (2013 - அறிமுகம்) |
ஆஷிஷ் ஷர்மா ஆகஸ்டு 30, 1984 இல் ஜெய்ப்பூரில் பிறந்தார். இவர் ஒரு விளம்பர நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகருமாவார். இவர் 2010ஆம் ஆண்டு இமேஜின் தொலைக்காட்சியில் குனாஹன் கா தேவதா (Gunahon Ka Devta) என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன் பிறகு சந்திரகுப்த மௌரியா தொடரில் நடித்தார். மேலும் ராஜ் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும்அழகிய லைலா தொடரில் ருத்ரா என்ற வேடத்தில் நடித்தார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதையின் ராமன் என்ற தொடரில் ராமனாக நடிக்கிறார்.
இவர் ஆகஸ்டு 30, 1984 இல் ஜெய்ப்பூரில் பிறந்தார். இவர் இந்திய சர்வதேசப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் அவர் தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில், ஃபேஷன் வடிவமைப்பில் ஒரு பட்டம் பெற்றார். இவர் தனது தாயாருடனும் மற்றும் அவரது மூத்த சகோதரருடனும் வாழ்கிறார். இவரது சகோதரர் ஒரு கணினிப் பயிற்சியாளராக உள்ளார்.
இவர் குனாஹன் கா தேவதா என்ற தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த அர்ச்சனாவைக் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர் 2010ஆம் ஆண்டு இமேஜின் டிவியில் குனாஹன் கா தேவதா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு 2011ஆம் ஆண்டு இமேஜின் டிவியில் சந்திரகுப்த மௌரியா என்ற தொடரில் நடித்தார். இவர் 2011ஆம் ஆண்டு பாலிவுட்ல் லவ் செக்ஸ் அவுர் தோக்கா (Love Sex aur Dhokha) என்ற திரைப்படத்தில் நடித்தார். 2012ம் ஆண்டு ராப் சே சோஹ்னா இஷ்க் (Rab Se Sohna Isshq) என்ற தொடரில் நடித்தார்.
தற்பொழுது கலர்ஸ் டிவியில் ரங் ரசியா என்ற தொடரில் ருத்ரா என்ற வேடத்தில் நடிக்கின்றார்.