ஆஸ்கார் ஹோர்ட்டா | |
---|---|
![]() 2012 இல் ஆசுக்கர் | |
பிறப்பு | ஓசுக்கர் ஓர்ட்டா ஆல்வரெசு 7 மே 1974 வீகோ, எசுப்பானியா |
தேசியம் | எசுப்பானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகம் |
காலம் | தற்கால மெய்யியல் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி | பகுப்பாய்வு மெய்யியல் |
கல்விக்கழகங்கள் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகம் |
'உயிரியல் நெறிமுறைகளுக்கு ஒரு சவால்: இனவாதத்தின் பிரச்சினை' (2007) | |
முனைவர் பட்ட ஆலோசகர் | லூயி சோட்டோ |
முக்கிய ஆர்வங்கள் |
|
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
வலைத்தளம் | |
masalladelaespecie |
ஆஸ்கார் ஹோர்ட்டா (Oscar Horta; எசுப்பானியம்: Óscar Horta Álvarez; பிறப்பு: 7 மே 1974)[1] ஒரு இஸ்பானிய விலங்குரிமை அறிஞரும், ஆர்வலரும், தார்மீக மெய்யியலாளருமாவார். இவர் தற்போது சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தில் (USC) மெய்யியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். "அனிமல் எதிக்ஸ்" என்ற அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவராவாரான ஹோர்டா, விலங்கு நெறியியல் பாடத்தில், குறிப்பாக காட்டு விலங்குகளின் இன்னல்கள் தொடர்பான பிரச்சனையைச் சுற்றி ஆய்வு செய்யும் தனது பணிக்காக அறியப்படுகிறார். இவர் விலங்கினவாதம் குறித்த ஆய்வுகளிலும் மனிதரல்லா விலங்குகளின் தார்மீக உரிமைகள் குறித்த வாதங்களைத் தெளிவுபடுத்துவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
ஹோர்டா மெய்யியல் குறித்து ஸ்பானியம், காலிசியன், போர்சுகீயம், ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மானியம் ஆகிய மொழிகளில் படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[2]