இ. க. நி. கட்டபொம்மன் | |
---|---|
திருநெல்வேலி, தமிழ்நாடு | |
இந்திய கப்பற்படையின் நிலையமான (இ. க. நி.) கட்டபொம்மன் தொலைதொடர்பு நிலையம் | |
வகை | கடற்படைத் தளம் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இந்தியக் கடற்படை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1990 |
பயன்பாட்டுக் காலம் |
1990–முதல் |
காவற்படைத் தகவல் | |
தங்கியிருப்போர் | தென்பிராந்திய கடற்படை தலைமையகம் |
இ. க. நி. கட்டபொம்மன் (INS Kattabomman) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி அருகே விசயநாராயணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் மிகக் குறைந்த அதிர்வெண் தொலைத் தொடர்பு வசதியின் பெயராகும்.[1] இந்த வசதி 3,000 ஏக்கர் பரப்பில் வசதி 13 அலைக் கம்பங்களை கொண்டதாகும். இவை மத்திய அலைக் கம்பத்தினைச் சுற்றி இரண்டு வளையங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அலைக் கம்பத்தின் உயரம் 301 மீட்டர் ஆகும். உள் வளையத்தில் உள்ள கம்பங்கள் 276.4 மீட்டர் உயரமாகவும், வெளிப்புற வளையத்தில் இவை 227.4 மீட்டர் உயரமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு குடை வடிவிலான வானலை வாங்கிகள் 471 மீட்டர் உயரமுடைய தாங்கிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்தியாவின் மிக உயரமான கட்டமைப்பாகும். மேலும் உலகின் மிக உயரமான இராணுவ தொழில்நுட்பக் கட்டமைப்பாகும். இதன் மூலம் குறைந்த அதிர்வெண் தொடர்பு வசதி இந்தியாவில் 2014இல் செயல்படத் துவங்கியது.[2]
இ. க. நி. கட்டபொம்மனின் வளர்ச்சி மற்றும் கட்டுமானம் 1984இல் வானளாவிய திட்டம் என இந்திய மதிப்பில் ரூபாய் 122 கோடி திட்ட மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது.[3] இத்திட்டத்தினை 20 அக்டோபர் 1990 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ரா. வெங்கட்ராமன் துவக்கிவைத்தார். இந்திய விடுதலை இயக்கத்தின் போது ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்ட மன்னர் கட்டபொம்மனின் நினைவாகப் பெயரிடப்பட்டது.[1]
இத்தளம் செயல்பாட்டிற்கு வந்த பின்னர், மிகக் குறைந்த அதிர்வெண் தொடர்புத் திறனை உருவாக்கிய உலகின் ஏழாவது நாடாக இந்தியா ஆனது.[4]
31 ஜூலை 2014 அன்று, இ. க. நி. கட்டபொம்மனில் ஒரு மிகக் குறைந்த அதிர்வெண் வசதி நிறுவப்பட்டது.[5] இதில் மேம்படுத்தல் கட்டுப்பாட்டு இடைமுகம் எண்ணிம மயமாக்கப்பட்டது.
மிகக் குறைந்த அதிர்வெண் வசதிக்கு அருகில் மிகவும் குறைந்த அதிர்வெண் தொடர்பு வசதியும் உள்ளது. இதன் கட்டுமானம் மார்ச் 2012இல் தொடங்கியது.[6] அணுசக்தி கட்டளை ஆணையம் அரிஹந்த் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களுடன் தொடர்பு கொள்ள இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது.[7]
உருசியாவுக்குப் பிறகு மிகக் குறைந்த அதிர்வெண் வசதியுடன் செயல்படும் இரண்டாவது நாடு இந்தியா ஆகும். இந்த வசதியினை அமெரிக்கா 2004இல் பயன்படுத்துவதை நிறுத்தியது. இதுபோன்ற மற்றொரு வசதி தமகுண்டம் காப்பு வனத்தில் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.[8]