இகுவா புதைப்படிவ காலம்:கிரிடேசியசு பிந்தையக்காலம் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | †இகுவா போர்சுக் பியாலினிக்கா மற்றும் அலிபானோவ், 1991
|
மாதிரி இனம் | |
†இகுவா மினுட்டா போர்சுக் பியாலினிக்கா மற்றும் அலிபானோவ், 1991 |
இகுவா (Igua) என்பது அழிந்துபோன உடும்புப் பல்லி பேரினம் ஆகும். இது கோபிகுவானியா என்ற குழுவைச் சேர்ந்தது., இது கிரெட்டேசியசு பிற்பகுதி காலத்தில் கோபி பாலைவனத்தில் காணப்பட்டது. மங்கோலியாவில் உள்ள பாருன் கோயோட் அமைப்பிலிருந்து மண்டை ஓட்டின் அடிப்படையில் 1991-ல் இகுவா மினுட்டா மாதிரி இனங்கள் பெயரிடப்பட்டது. இந்த மண்டை ஓடு மிகவும் சிறியது. இதன் அளவு 14 மில்லிமீட்டர்கள் (0.55 அங்) ஆகும். மேலும் இதில் பல எலும்புகள் இணைக்கப்படாமலிருப்பதால் இளம் வயதினரைச் சேர்ந்ததாக இருக்கலாம். மூக்கு-குத நீளம் (மொத்த உடல் நீளம் வால் கழித்தல்) 55 முதல் 65 மில்லிமீட்டர்கள் (2.2 முதல் 2.6 அங்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இகுவா மிகவும் வட்டமான மண்டை ஓட்டைக் கொண்டிருப்பதால் போல்ருசியா போன்ற தொடர்புடைய கோபிகுவானியர்களிடமிருந்து வேறுபடுகிறது. இது தோற்றத்தில் லியோலேமசு மற்றும் திராபிடரசு போன்ற வாழும் வகைகளை ஒத்திருக்கிறது. பற்கள் மூவிதகளுடன் பக்கவாட்டுப் பல் வகையாகும். அதாவது இவை தாடைகளின் உள் மேற்பரப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.[1]
பேரினம் இகுவா இன உறவுகளைக் காட்டும், கீழே கொடுக்கப்பட்டுள்ள கிளை வரைபடம், தாசா மற்றும் பலரிடமிருந்து (2012) பெறப்பட்டது.[2]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||