டேவிட் இங்கா கோர் மிங் 11 நவம்பர் 1972 இல் பிறந்தார். இவர் மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் 3 திசம்பர் 2022 முதல் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கீழ் பக்காத்தான் ஹராப்பான் (PH) நிர்வாகத்தில் ஊராட்சி துறை மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றார்.[1]
இவர் ஜூலை 2018 முதல் ஜூலை 2020 வரை முன்னாள் சபாநாயகர் முகமது ஆரிஃப் எம்டி யூசோப்பின் கீழ் மக்களவை துணை சபாநாயகராக பணியாற்றினார்.[2]
இவர் 2022யில் நடைபெற்ற பொது தேர்தலில், தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இரண்டாம் முறையாக தேர்வு செய்யப்படடார். அதற்கு முன்பதாக மார்ச் 2008 முதல் மே 2018 வரை தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்தார்.
இவர் ஜனநாயக செயல் கட்சியின் (DAP) தேசிய துணைத் தலைவராகவும் பேராக் மாநிலத்தின் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இங்கா கோர் மிங், மலேசியாவின் கிளந்தான், கோத்தா பாருவில் பிறந்தார், [3] [4] அவரது குடும்ப பூர்வீகம் ஃபுஜோ வம்சாவளியைச் சேர்ந்தது (அவரது தாயார் கிளந்தனைச் சேர்ந்தவர்) அவர்கள் மலாயாவுக்கு வந்தபோது ஆயர் தாவாரில் தங்கியிருந்தார்.
இவர் மலாயா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார். பேராக் நிர்வாகக் குழுவிற்கு அவர் நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் ஆயர் தாவாரிலும், ஈப்போவிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
{{cite web}}
: Missing or empty |title=
(help)