இசபெல் மார்ட்டின் லூயிசு Isabel Martin Lewis | |
---|---|
பிறப்பு | ஓல்டு ஆர்ச்சர்டு பீச், மேய்ன் | சூலை 11, 1881
இறப்பு | சூலை 31, 1966 | (அகவை 85)
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | அமெரிக்க நாவாய் வான்காணகம் |
கல்வி கற்ற இடங்கள் | கோர்னெல் பல்கலைக்கழகம் |
இசபெல் மார்ட்டின் இலெவிசு (Isabel Martin Lewis, சூலை 11, 1881 – சூலை 31, 1966) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் தான் முதன்முதலாக அமெரிக்க நாவாய் வான்காணகம் உதவி வானியலாளராக பணியில் அமர்த்திய பெண் ஆவார். இவர் 1918 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கனடிய வானியல் கழகத்தின் உறுப்பினரும் பசிபிக் வானியல் கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.
இவர் மைனே ஓல்டு ஆர்ச்சர்டு பீச்சில் 1881 ஜூலை 11 இல் பிறந்தார்.[1] இவர் 1903 இல் கார்னல் பல்கலைக்கழகத்தில் கலை இளவல் பட்டத்தையும்1905 இல் தன் கலை முதுவர் பட்டத்தையும் கணிதவியலில் பெற்றார்.[1] இவ 1905 முதல் 1907 வரை சைமன் நியூகோம்புக்கு மாந்தக் கணிப்பாளராக இருந்துள்ளார். நியூகோம்பின் பார்வையில் இவர் சூரிய ஒளிமறைப்புகளின் தரவுகளைப் பற்றி பணிபுரிந்தார். இது இவரது பின்னாள் பணிக்குப் பெரிதும் உதவியது.
இவர் 1908 இல் நாவாய் வான்காட்டி அலuவலகத்தில் கணிப்பாளராகப் பணியைத் தொடங்கியுள்ளார். இவர் நாவாய் வான்காணகம் பணிக்கு அமர்த்திய முதல் பெண்மணி அல்லவென்றாலும் (மரியா மிட்செல் 1849 இல் இங்கு கணிப்பாளராக சேர்ந்த முதல் பெண்மணியாவார்) முதல் பெண் வானியல் உதவியாளர் ஆவார். இங்கு தான் இவர் தன் கணவராகிய கிளிப்போர்டு சுபென்சர் இலெவிசைச் (இவரும் ஒரு வானியலாளர் ஆவார்) சந்தித்தார். இவர்கள் இருவரும் 1912 திசம்பர் 4 இல் திருமணம் செய்துகொண்டனர்.[1]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)