மலேசிய கூட்டரசு சாலை 52 Malaysia Federal Route 52 Laluan Persekutuan Malaysia 52 | |
---|---|
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை Iskandar Coastal Highway Johor Bahru West Coast Parkway Lebuhraya Pesisir Pantai Iskandar | |
கோத்தா இசுகந்தர் நெடுஞ்சாலை (2016) | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 23 km (14 mi) இசுகந்தர் புத்தேரி–தங்கா விரிகுடா: 15 km (9.3 mi) தங்கா விரிகுடா–நகர மையம்: 8 km (5.0 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | இசுகந்தர் புத்திரி |
கோத்தா இசுகந்தர் சாலை புக்கிட் இண்டா நெடுஞ்சாலை | |
கிழக்கு முடிவு: | ஜொகூர் பாரு நகர மையம் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோத்தா இசுகந்தர்; பெர்லிங்; புக்கிட் இண்டா; தங்கா விரிகுடா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 52; அல்லது Iskandar Coastal Highway) (ICH); (முன்னர்: ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway); மலாய்: Laluan Persekutuan Malaysia 52 அல்லது Lebuhraya Pesisir Pantai Iskandar (LPPI); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]
ஜொகூர் பாரு மாநகரத்தில் தற்போது மிகவும் பரபரப்பான சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 0; இசுகந்தர் புத்திரியில் உள்ள லேடாங் வட்டச்சுற்று வழியில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டணமில்லா நெடுஞ்சாலை; மற்றும் இசுகந்தர் மலேசியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது இசுகந்தர் மலேசியாவில் கிழக்கு-மேற்கு நோக்கிய ஐந்தாவது அதிவேக நெடுஞ்சாலை ஆகும்.
இசுகந்தர் மலேசியாவில் உள்ள இதர நெடுஞ்சாலைகள்:
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway) என்று அழைக்கப்பட்டது. 8 கிமீ (5 மைல்) நீளம் கொண்ட அந்தக் கடற்கரை பூங்கா சாலை, சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முன்பு மலேசிய கூட்டரசு சாலை 1-இன் ஒரு பகுதியாக இருந்தது.
இருப்பினும், 1965-இல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, சிங்கப்பூர் மக்களுக்கான வணிக மையமாக ஜொகூர் பாரு மாற்றம் கண்டது. அதன் காரணமாக சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]