இசுகந்தர் புத்திரி (P162) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Iskandar Puteri (P162) Federal Constituency in Johor | |
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி (P162 Iskandar Puteri) | |
மாவட்டம் | ஜொகூர் பாரு மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 222,437 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | இசுகந்தர் புத்திரி தொகுதி |
முக்கிய நகரங்கள் | இசுகந்தர் புத்திரி; சுகூடாய்; கெலாங் பாத்தா; முத்தியாரா ரினி; லீமா கெடாய், கங்கார் பூலாய்; தஞ்சோங் குப்பாங் |
பரப்பளவு | 294 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
மக்களவை உறுப்பினர் | லியூ சின் தோங் (Liew Chin Tong) |
மக்கள் தொகை | 447,697 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri Federal Constituency; சீனம்: 依斯干达公主城国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P162) ஆகும்.[6]
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டில் இருந்து இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, ஜொகூர் மாநிலத்தின் இசுகந்தர் மலேசியா வளர்ச்சி மண்டலத்தில் உள்ள ஒரு தொகுதி ஆகும். இசுகந்தர் மலேசியா, தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]
இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]
2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இசுகந்தர் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2018 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
இசுகந்தர் புத்திரி தொகுதி 2018-ஆம் ஆண்டில் கெலாங் பாத்தா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | ||||
14-ஆவது மக்களவை | P162 | 2018–2022 | லிம் கிட் சியாங் (Lim Kit Siang) |
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | லியூ சின் தோங் (Liew Chin Tong) |
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
லியூ சின் தோங் (Liew Chin Tong) | பாக்காத்தான் அரப்பான் | 96,819 | 59.15 | 10.09 ▼ | |
ஜேசன் தியோ சிவ் கோக் (Jason Teoh Sew Hock) | பாரிசான் நேசனல் | 36,783 | 22.47 | 8.29 ▼ | |
தான் நாம் சா (Tan Nam Cha) | பெரிக்காத்தான் நேசனல் | 30,078 | 18.38 | 18.38 | |
மொத்தம் | 1,63,680 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 1,63,680 | 98.75 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 2,067 | 1.25 | |||
மொத்த வாக்குகள் | 1,65,747 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 2,22,437 | 74.42 | 11.47 ▼ | ||
Majority | 60,036 | 36.68 | 1.84 ▼ | ||
பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மூலம்: [12] |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)