இசுகார்பியன் நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வில்லியம் கோட்ட் | மேக்சிமில்லியன் வோன் ஹெர்ஃப் | ||||||
இழப்புகள் | |||||||
173 பேர்[1] |
இசுகார்பியன் நடவடிக்கை (ஸ்கார்பியன் நடவடிக்கை, Operation Skorpion) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு நடவடிக்கை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் அச்சு நாட்டுப் படைகள் லிபியாவிலுள்ள ஆலஃபாயா கணவாயை நேச நாட்டுபடைகளிடமிருந்து கைப்பற்றின.
வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையில் 1941ல் தளபதி ரோம்மலின் தலைமையிலான அச்சு நாட்டுப்படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வந்தன. லிபிய, எகிப்து நாட்டுப் பகுதிகளில் இரு தரப்புப்படைகளும் மோதி வந்தன. மே 1941ல் பிரீவிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்ட தாக்குதலின் மூலம் நேச நாட்டுப் படைகள் ஆலஃபாயா கணவாயைக் இத்தாலியப் படைகளிடமிருந்து கைப்பற்றின. அச்சு நாட்டு தளவாடப் போக்குவரத்துக்கு இக்கணவாய் மிக முக்கியமானதலால், ரோம்மல் அதனை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். மே 26ம் தேதி ரோம்மலின் ஆப்பிரிக்கா கோரின் மூன்று படைப்பிரிவுகள் இக்கணவாயைத் தாக்கின. ஒரு நாள் முழுவதும் தாக்குப்பிடித்த பிரிட்டானியப் படைகள் மறுநாள் சுற்றிவளைக்கப்படுவதைத் தவிர்க்க ஆலஃபாயாவை விட்டு வெளியேறி பின்வாங்கின. கணவாய் மீண்டும் அச்சுப் படைகள் வசமானது. இந்த மோதலில் 173 பிரிட்டானியப் படைவீரர்கள் மாண்டனர்/காயமடைந்தனர். மேலும் 8 கள பீரங்கிகள், 4 டாங்கு எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் 5 காலாட்படை டாங்குகள் நாசமாகின. இசுகார்பியன் நடவடிக்கையின் வெற்றி மூலம், பிரீவிட்டி நடவடிக்கையில் இழந்த பகுதிகள் அனைத்தையும் ஆப்பிரிக்கா கோர் மீட்டுவிட்டது.