இசுத்மோகைலா டிக்கா | |
---|---|
இசுத்மோகைலா டிக்கா, கோசுட்டா ரிக்கா காடுகளில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஏனூரா
|
குடும்பம்: | கைலிடே
|
பேரினம்: | இசுத்மோகைலா
|
இனம்: | இ. டிக்கா
|
இருசொற் பெயரீடு | |
இசுத்மோகைலா டிக்கா இசுடாரெட், 1966 | |
வேறு பெயர்கள் | |
கைலா டிக்கா (இசுடாரெட், 1966) |
இசுத்மோகைலா டிக்கா (Isthmohyla tica) இசுடாரெட்டின் மரத் தவளை என்று அறியப்படுகிறது. இத்தவளையானது கைலிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளையாகும். இது கார்டிலெரா டி திலரென், கார்டிலெரா மத்தி, கார்டிலெரா டி தலமான்க, கொஸ்சுடா ரிக்கா, மேற்கு பனாமா பகுதிகளில் காணப்படுகிறது.[1][2][3] டிக்கா என்ற குறிப்பிடும் பெயரானது கொஸ்டா ரிக்கா பெயரிலிருந்து பெறப்பட்டது.[4]
முதிர்வடைந்த ஆண் தவளைகள் 29–34 mm (1.1–1.3 அங்) அளவிலும், பெண் தவளைகள் சுமார் 34–42 mm (1.3–1.7 அங்) நீளமும் உடையன. இந்நீளமானது தலையின் முன் பகுதியிலிருந்து இனப்புழை வரை அளவிடப்படுகிறது.[4][3] முகமானது வட்ட வடிவிலானது. செவிப்பறை தெளிவாகக் தெரியக்கூடியது. செவிப்பறை மேல் மடிப்புக் காணப்படும். கால் விரல்கள் சவ்வுகளுடன் முனைகளில் தட்டுபோன்று காணப்படும்.[4] முதுகு பகுதி பச்சை மற்றும் பழுப்பு நிற காறைகளுடன் காணப்படும். ஒளிர்ந்த பசுமை நிற கோடுகளும் காணப்படுகின்றன. பக்கவாட்டு கோடுகள் பொதுவாகப் பழுப்பு நிறமுடையவை அல்லது மஞ்சள் நிறத்துடன் மங்கலானவை. மேல் கை, பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறமானது. கை மற்றும் கால்களின் மேல் மேற்பரப்பில் அடர் நிறத்தில் கோடுகள் காணப்படும். வயிற்றுப்பகுதியானது மங்கிய வெண்மை நிறமுடையது.[3]
தலைப்பிரட்டைகள் சிறியவை, தட்டையானவை, நீள வாலுடன் சிறிய துடுப்புடன் காணப்படும். மிகப்பெரிய வாய்ப்புற தட்டுடன் காணப்படும். இத்தட்டானது வேகம் அதிகமாக உள்ள நீரோடைகளில் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவுகிறது.[3]
இசுத்மோகைலா டிக்கா கடல்மட்டத்திலிருந்து சுமார் 1,100–1,650 m (3,610–5,410 அடி) வரையிலான உயரமான மலைப்பகுதியில் உள்ள ஈரப்பதமான மழைக்காடுகளில் காணப்படுகிறது.[1][3] இவை இரவு நேர வாசிகளாகும். வேகமாக ஓடும் நீரோடைகளில் தண்ணீரிலிருந்து சுமார் 1–3 m (3–10 அடி) மீட்டர் உயரத்தில் காணப்படும் தாவர இலைகள் மீது காணப்படும். இங்கு இனப்பெருக்கம் மேற்கொள்ளும் இத்தவளைகள், முட்டைகளைத் தண்ணீருக்குள் காணப்படும் பாறைகளின் கீழ் இடுகின்றன.[1]
இந்த இனத்தினைச் சார்ந்த பல தவளைக் கூட்டங்கள் மறைந்துவிட்டன. பெரிய அளவில் நிகழ்ந்த இந்த தவளையின் மறைவுக்கான காரணங்கள் அறியப்படாத போதிலும், சைட்ரிடியோமைகோசிஸ் எனும் நோய், காலநிலை மாற்றம் முக்கியப்பங்கு வகிக்கின்றது. உள்ளன. வாழ்விட இழப்பால் இந்த இனம் அழிக்கப்படுவது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இதன் பரவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.[1]