தற்போது இஸ்ரேல் நாட்டில் வாழும் எத்தியோப்பிய கருப்பின யூதர்களை (Ethiopian Jews) பெட்டா இசுரேல் என்று அழைப்பர்.[2][3][4] 2022ஆம் ஆண்டில் இஸ்ரேலில் வாழும் எத்தியோப்பியா யூதர்களின் மொத்த மக்கள் தொகை 1,68,800 ஆகும். இது இஸ்ரேலிய யூதர்களில் 2.3% மற்றும் இஸ்ரேல் மக்கள் தொகையில் 1.75% ஆகும். இவர்கள் ஹேமனோத் யூதம் மற்றும் யூதக் குருசார் யூதம் பிரிவைப் பின்பற்றுகின்றனர்[5][6], இவர்கள் எபிரேயம்,.அம்காரியம் மற்றும் திகுரிஞா மொழிகளைப் பேசுகின்றனர். இம்மக்கள் தெற்கு இஸ்ரேல் மற்றும் நடு இஸ்ரேல் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.
இஸ்ரேல் நாடு உதயமாவதற்கும் முன்னரும், பின்னரும், சீயோனிசம் இயக்கம் மூலம், 1948ஆம் ஆண்டு முதல் எத்தியோப்பிய யூதர்கள் இஸ்ரேல் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 1984ஆம் ஆண்டில் மோசஸ் நடவடிக்கை மற்றும் 1991ஆம் ஆண்டில் சாலமோன் நடவடிக்கை மூலம் எத்தியோப்பிய யூதர்களை சூடான் கடற்கரை வழியாக இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[7][8]
↑Weil, S. 2016b “The Complexities of Conversion among the ‘Felesmura’”. In: Eloi Ficquet, Ahmed Hassen and Thomas Osmond (eds.), Movements in Ethiopia, Ethiopia in Movement: Proceedings of the 18th International Conference of Ethiopian Studies. Addis Ababa: French Center for Ethiopian Studies, Institute of Ethiopian Studies of Addis Ababa University; Los Angeles: Tsehai Publishers, Vol. 1 pp.435-445.
↑Weil, Shalva (2011). "Operation Solomon 20 Years On". International Relations and Security Network (ISN). பார்க்கப்பட்ட நாள் 2017-08-27.
↑Weil, Shalva (2007). "Operation Solomon by Stephen Spector". Studies in Contemporary Jewry, an Annual. Vol. 22. New York and Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 341–343.