இச்ரா Ichhra | |
---|---|
புறநகர் | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
நகரம் | லாகூர் |
நிர்வாக நகரம் | சமனாபாத்து மண்டலம் |
ஒன்றியக் குழு (பாக்கித்தான்) | 100 |
அரசு | |
• வகை | ஒன்றியக் குழு |
இச்ரா (Ichhra) பாக்கித்தான் நாட்டின் லாகூர் நகரத்திலுள்ள ஒரு குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும். [1] [2]
மிகவும் பழமையான பகுதி என்பதால், இச்சராவில் சில பழமையான கட்டிடங்களைக் காணலாம். லாகூரின் மிகவும் சிக்கனமான சந்தைகளில் இச்ரா சந்தை குறிப்பிடத்தக்கது. இந்த சந்தை அதன் பாரம்பரிய மற்றும் கலாச்சார ஆடைகள் மற்றும் பஞ்சாப் முழுவதிலும் இருந்து வழங்கப்படும் பிற கைவினைப்பொருட்கள் மற்றும் அதன் தளபாடங்கள் தேர்வு ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது. இச்சராவில் ஒரு பெரிய கிறித்துவ சமூகம் வாழ்கிறது. [3]
இச்ராவில் பல சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. இச்ரா ஒன்றியக் குழுவை உருவாக்குகிறது, மேலும் சமனாபாத்து தாலுக்காவின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது.
1931 ஆம் ஆண்டில், அல்லாமா மசுரிகி என்று அழைக்கப்படும் இனயதுல்லா கான் மசுரிகி, இச்ரா (இச்ரா) விலிருந்து தனது காக்சர் இயக்கத்தைத் தொடங்கினார், 1963 ஆம் ஆண்டில் அவர் இறந்தவுடன், மசுரிகி இங்கு அடக்கம் செய்யப்பட்டார். [4]