இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதயத்தில் உள்ள இடது ஆரிக்கிளும் இடது வெண்ட்டிரிக்கிளும் கூட்டாகச் சேர்த்து இடது இதயம் என்று அழைக்கப்படுகிறது. சில நேரங்களில் இடது ஆரிக்கிள், இடது வெண்ட்டிரிக்கிள், மகாதமனி ஆகிய மூன்றும் சேர்த்து இடது இதயம் என்று குறிக்கப்படுவதும் உண்டு.
இடது ஆரிக்கிள் நுரையீரலில் இருந்து வரும் ஒட்சிசன் ஏற்றப்பட்ட இரத்தத்தை பல்மோனரி சிரைகளின் வழியாகப்பெறுகிறது. பின் குருதி மிட்ரல் வால்வு வழியாய் இடது வெண்ட்டிரிக்களுக்கு அனுப்பப்படுகிறது. இடது வெண்ட்டிரிக்கிள் மகாதமனி வால்வு வழியாக இரத்தத்தை மகாதமனிக்குள் செலுத்துகிறது.