இடாலன் முசன் | |
---|---|
தேசியம் | அமெரிக்கன் |
பணி | திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
இடாலன் முசன் (ஆங்கில மொழி: Dalan Musson) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் அயர்ன் ஸ்கை: தி கமிங் ரேஸ் (2019) மற்றும் பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் (2021) ஆகியவற்றில் பணியாற்றியதன் மூலம் அறியப்படுகிறார்.
இவர் 2007 ஆம் ஆண்டில் வெளியான 'தி கோல்டன் காம்பசு' என்ற நிகழ்ப்பட ஆட்டத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக தனது திரைத்துறை வாழ்க்கையை தொடங்கினார்.[1] அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டில் வெளியான 'சீ வாட் ஐ ஆம் சேயிங்: தி டெஃப் என்டர்டெய்னர்ஸ் டாக்குமெண்டரி என்ற ஆவணப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றினார்.[2] பின்னர் நவம்பர் 2012 இல், ஜெரேமியா ஹார்மிற்கு திரைக்கதை எழுத அவர் பணியமர்த்தப்பட்டார்.[3] பின்னர் 2014 இல், அவர் 'ஐயன் ஸ்கை: தி கமிங் ரேஸ்' என்ற கற்பனைத் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதினார்.[4]
இவர் 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தொடரான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜருக்கு "ட்ரூத்" என்ற தலைப்பில் ஒரு அத்தியாயத்தை இந்தத் தொடரை உருவாக்கிய மால்கம் ஸ்பெல்மேனுடன் இணைந்து எழுதினார்.[5] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு (2024) உடன் இணைந்து எழுதுவதன் மூலம் அவர் குறிப்பிடத்தக்கவர் ஆனார்.[6]