இடியோனிக்சு கோமண்டகென்சிசு Idionyx gomantakensis | |
---|---|
![]() | |
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஓடனேட்டா
|
குடும்பம்: | சிந்தேமெசிடிடே
|
பேரினம்: | இடியோனிக்சு
|
இனம்: | இ. கோமண்டகென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
இடியோனிக்சு கோமண்டகென்சிசு சுப்ரமணியன், ரங்னேகர், & நாயக், 2013 |
இடியோனிக்சு கோமண்டகென்சிசு (Idionyx gomantakensis), [1] எனும் தட்டாரப்பூச்சி பொதுவாக கோலோம் நிழல் நடனக் கலைஞர் என்று அழைக்கப்படுகிறது. இது சின்தெமிசுடிடே குடும்பத்தில் உள்ள தட்டாரப்பூச்சி சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.
இந்த தட்டாரப்பூச்சியானது கோவாவின் தாது மணல் அறக்கட்டளையின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன், பராக் இரங்னேகர் மற்றும் உரோகன் நாயக் அவர்கள் நடத்திய தட்டாரப்பூச்சி கணக்கெடுப்பின் போது, கோவாவின் காலேமில் முதன்முதலில் காணப்பட்டது.[2]
இந்த புதிய சிற்றினத்தை இடியோனிக்சு பேரினத்தின் மற்ற சிற்றினங்களிலிருந்து நீளமான மற்றும் மெல்லிய மலவாய் கொம்பு மற்றும் பத்தாவது அடிவயிற்று கண்டத்தில் காணப்படும் முடி, மலவாய் கொம்பின் அடிப்பகுதியில் பற்கள் இல்லாதது மற்றும் எபிப்ரோக்டின் பக்கவாட்டு மடல்களின் முடிவில் காணப்படும் தங்க முடிகளால் வேறுபடுத்தலாம்.[3]