இட்டாவா வனவிலங்குப் பூங்கா | |
---|---|
![]() இட்டாவா வனவிலங்குப் பூங்காவின் நுழைவாயில் | |
![]() | |
26°46′02″N 79°00′07″E / 26.767261°N 79.001896°E | |
திறக்கப்பட்ட தேதி | 24 நவம்பர் 2019 |
அமைவிடம் | இட்டாவா, உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிலப்பரப்பளவு | 350 எக்டேர்கள் (860 ஏக்கர்கள்)[1] |
விலங்குகளின் எண்ணிக்கை | 165[2] |
உயிரினங்களின் எண்ணிக்கை | 5 (2019) |
உரிமையாளர் | வனத்துறை, உத்தரப் பிரதேச அரசு |
இயக்குனர் | கிருஷ்ண குமார் சிங்[3] |
வலைத்தளம் | etawahlionsafari |
இட்டாவா வனவிலங்கு சரணாலயம் (Etawah Safari Park) முன்னர் இட்டாவா சிங்கப் பூங்கா, அதிகாரப்பூர்வமாக ஆசிய சிங்க இனப்பெருக்கம் மையம், பல்லுயிர் வனவிலங்குப் பூங்கா, இட்டாவா,[4] என்றெல்லாம் அறியப்பட்ட இது இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் இட்டாவாவில் உள்ள வனவிலங்குப் பூங்காவாகும். இது 2019 நவம்பரில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இதில் பல விலங்குகள், ஆசியச் சிங்கங்களின் இனப்பெருக்கம் மையம், பார்வையாளர் மையம் ஆகியவையும் அடங்கும்.[5]
இந்தத் திட்டம் முதன்முதலில் 2006இல் முன்மொழியப்பட்டது. [6] மே 2012இல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பூங்காவை எசுப்பானிய நிறுவனமான ஆர்ட் உர்பே வடிவமைத்தது. [7] முதலில், ஆறு சிங்கங்கள் 2014 இல் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டன. 2015 ஆம் ஆண்டில் ஒரு மான் பூங்கா, மறிமான் பூங்கா, சிறுத்தைப் பூங்கா, கரடிப் பூங்கா ஆகியவை சேர்க்கப்பட்டு பூங்காவின் பெயர் இட்டாவா வனவிலங்குப் பூங்கா என மறுபெயரிடப்பட்டது. மான் பூங்கா 6 அக்டோபர் 2016 இல் திறக்கப்பட்டது. [8] [9] மீதமுள்ள பூங்காக்கள் 1 ஜூன் 2018 அன்று திறக்கப்பட்டன. [10] [11] சிங்கப்பிரிவு தவிர இந்த பூங்கா 24 நவம்பர் 2019 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
இங்குள்ள பூங்காக்களில், சிங்கப் பூங்கா, மான் பூங்கா , மறிமான் பூங்கா , கரடிப் பூங்கா சிறுத்தைப் பூங்கா ஆகியவை அடங்கும். [12] [13] 2019 நவம்பரின்படி , சிங்கம் மற்றும் சிறுத்தைப் பூங்காக்கள் மத்திய விலங்கு காட்சியக ஆணையத்தின் (CZA) ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. [14]
இந்த ஆசியச் சிங்கம் இனப்பெருக்க மையத்தில் பன்னிரண்டு சிங்கங்கள் உள்ளது.[15] இது குசராத்தின் உயிரியல் பூங்காக்களிலிருந்து பெரும்பாலும் செப்டம்பர் 2014 இல் வந்த பதினொரு சிங்கங்களுடன் தொடங்கப்பட்டது.[16] நான்கு சிங்கங்களும் ஐந்து குட்டிகளும் "கேனைன் டிஸ்டெம்பர்" என்ற ஒரு வைரசு காரணமாக இறந்தன. பின்னர் சிங்கங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டது.[17] 2020 திசம்பரின் படி, மையத்தில் ஒன்பது குட்டிகள் உள்ளன.[18] [19] [20] [21]
பார்வையாளர் வசதி மையத்தில் கணினி வரைபடம், பெரிய வடிவமைப்பு காட்சிகள் கொண்ட பல்லூடக அருங்காட்சியகம், பார்வையாளர்களுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதலுக்கான நாற்பரிமாண கல்வி அரங்கம் ஆகியவையும் அடங்கும். [22]
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: |last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)