பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இட்டெர்பியம் சல்பைடு, ஈரெட்டெர்பியம் முச்சல்பைடு, இட்டெர்பியம் செசுக்கியூசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12039-20-2 | |
ChemSpider | 145470 |
EC number | 234-888-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166022 |
| |
பண்புகள் | |
S3Yb2 | |
வாய்ப்பாட்டு எடை | 442.29 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 6.02 கி/செ.மீ3 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | rhombic |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இட்டெர்பியம்(III) சல்பைடு (Ytterbium(III) sulfide) Yb2S3 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச்சேர்மம் உருவாகிறது.[1]
மந்த வாயுச் சூழலில் தூயநிலை இட்டெர்பியமும் கந்தகமும் 450 முதல் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் இட்டெர்பியம்(III) சல்பைடு உருவாகிறது
ஐதரசன் சல்பைடு வாயுவை சூடான இட்டெர்பியம்(III) ஆக்சைடு மீது செலுத்தி வினைபுரியச் செய்தாலும் இட்டெர்பியம்(III) சல்பைடு கிடைக்கிறது.
சாய்சதுரச் சமச்சீரில் a = 0.678 நானோமீட்டர், b = 0.995 நானோமீட்டர், c = 0.361 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள் நிறத்தில் இட்டெர்பியம்(III) சல்பைடு படிகமாகிறது.[2]
இட்டெர்பியம்(III) சல்பைடு மட்பாண்டங்கள் உற்பத்தியிலும் ஒரு வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]