இட்றௌட்டன் விதி (Trouton's rule ) என்பது ஆவியாதலின் மறை வெப்பத்திற்கும் கொதிநிலைக்குமுள்ள ஒரு தொடர்பை காட்டுவதாகும். 1876-ல் முதலில் பிக்டெட் முன்மொழிய 1877 இல் ராம்சேயும் அதன் பின் 1884 இல் இட்றௌட்டனும் இந்த விதியினை முன் வைத்தனர். இவ்விதிப்படி ஒரு மூலக்கூறின் ஆவியாகும் மறை வெப்பத்திற்கும் தனிவெப்பநிலை அலகில் அதன் கொதிநிலைக்கும் உள்ள விகிதம் ஒரு மாறிலியாகும்.[1][2][3]
M என்பது ஒரு பொருளின் மூலக்கூறு நிறை என்றும் அதன் ஆவியாகு மறைவெப்பம் L கலோரி/கிராம், என்றும் தனி வெப்பநிலை அலகில் அதன் கொதிநிலை T என்றும் கொண்டால்
பலபொருட்களுக்கும் இதன் மதிப்பு 21 கலோரி/கிராம் ஆக உள்ளது. தண்ணீருக்கு 18*540/373 =26 என்று கிடைக்கிறது.