இணை ஒலிம்பிக்கில் இலங்கை

இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில்
இலங்கை
ஐ.பி.சி குறியீடுSRI
NPCமாற்றுத்திறனாளர் விளையாட்டுக்களுக்கான தேசியக் கூட்டமைப்பு
பதக்கங்கள்
தங்கம்
1
வெள்ளி
0
வெண்கலம்
3
மொத்தம்
4
கோடைக்கால போட்டிகள்

இலங்கை அட்லான்ராவில் நடைபெற்ற 1996 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் இணை ஒலிம்பிக் போட்டிகளில் அடியெடுத்து வைத்தது. இப்போட்டிகளில் இலங்கை சார்பில் ஒரேயொரு வீரராக காலிக பதிரண தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற அனைத்துக் கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளிலும் இலங்கை பங்குபெற்று வந்துள்ளது. எனினும், இதுவரை குளிர்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் அது பங்குபெறவில்லை.[1]

லண்டனில் நடைபெற்ற 2012 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் இலங்கை தனது முதல் பராலிம்பிக் பதக்கத்தை வென்றது. இவ் ஒலிம்பிக்கில் பிரதீப் சஞ்சய ஆடவர் 400 மீற்றர் T46 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[2]

ரியோவில் இடம்பெற்ற 2016 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் இலங்கை வெண்கலப் பதக்கம் ஒன்றை வென்றது. ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவில் தினேசு பிரியந்த இப் பதக்கத்தைப் பெற்றார்.[3]

தோக்கியோவில் இடம்பெற்ற 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் இலங்கை தனது முதலாவது இணை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்தது. தினேசு பிரியந்த ஏரத் ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு, 67.79 மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய உலக மற்றும் இணை ஒலிம்பிக் சாதனைகளைப் படைத்தார். துலான் கொடித்துவக்கு 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவில், 65,61 மீ தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.[4][5]

பதக்கப் பட்டியல்

[தொகு]
போட்டிகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
2020 தோக்கியோ1012
2012 லண்டன்0011
2016 ரியோ0011
மொத்தம் (3 போட்டிகள்க்கள்)1034

பதக்க வெற்றியாளர்கள்

[தொகு]
பதக்கம் பெயர் விளையாட்டு Sport Event
3 வெண்கலம் சஞ்சய, பிரதீப்பிரதீப் சஞ்சய ஐக்கிய இராச்சியம் 2012 லண்டன் தடகளம் ஆடவர் 400 மீற்றர் T46
3 வெண்கலம் பிரியந்த, தினேசுதினேசு பிரியந்த பிரேசில் 2016 ரியோ டி செனீரோ தடகளம் ஆடவர் ஈட்டி எறிதல் F46
3 தங்கம் பிரியந்த, தினேசுதினேசு பிரியந்த சப்பான் 2020 தோக்கியோ தடகளம் ஆடவர் ஈட்டி எறிதல் F46
3 வெண்கலம் கொடித்துவக்கு, துலான்துலான் கொடித்துவக்கு சப்பான் 2020 தோக்கியோ தடகளம் ஆடவர் ஈட்டி எறிதல் F64

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வார்ப்புரு:IPC npc profile
  2. [1]
  3. http://www.dailymirror.lk/115781/Dinesh-Priyantha-wins-Javelin-bronze-at-Rio-Paralympics
  4. "Athletics - Men's Javelin Throw - F64 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  5. https://www.newsfirst.lk/2021/08/30/sri-lanka-wins-02nd-paralympics-medal-bronze-for-samitha-dulan/

வார்ப்புரு:Nations at the Paralympics வார்ப்புரு:National sports teams of Sri Lanka


வார்ப்புரு:SriLanka-sport-stub வார்ப்புரு:Paralympic-nation-stub