a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்க விளையாட்டில், ஒரே நிறத்தில் இரண்டு சிப்பாய்களோ இரண்டுக்கு மேற்பட்ட சிப்பாய்களோ அடுத்துள்ள வரிசைகளில் இணைந்து நின்றிருத்தலை இணைக்கப்பட்ட சிப்பாய்கள் (connected pawns) என்று அழைக்கின்றனர். இவை தனித்த சிப்பாயிலிருந்து வேறுபட்டவைகளாகும். இணைக்கப்பட்டுள்ள இச்சிப்பாய்களே சிப்பாய் அணிவகுப்பு முறையை உருவாக்கும் கருவியாக உள்ளன. ஏனெனில், வலதுபக்கக் கடைசியில் உள்ள வெள்ளை சிப்பாய்களைப் போல அடுத்துள்ள வரிசையில் மூலைவிட்டமாக நின்றால் சிப்பாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும் சிப்பாய்ச் சங்கிலியை அவற்றால் உருவாக்க முடியும். பின்னால் நிற்கும் ஒவ்வொரு சிப்பாயும் அதற்கு முன்னால் நிற்கும் சிப்பாயை பாதுகாக்க முடியும். சிப்பாய் சங்கிலியைத் தாக்க முயலும் எதிரிக்கு எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கும் கடைசி சிப்பாயைத்தான் எளிதாகத் தாக்க முடியும். ஏனெனில் காப்பாற்ற யாருமில்லாததால் அதுவே பலவீனமாகி நிற்கும்.
இணைக்கப்பட்ட சிப்பாய்கள் முன்னேறிச் செல்லும் அதே வரிசையிலோ அடுத்துள்ள வரிசைகளிலோ எதிரிகள் யாரும் இல்லையென்றால் அவற்றை இணைக்கப்பட்ட எதிரியில்லாச் சிப்பாய்கள் என்பர். இத்தகைய சிப்பாய்கள் ஆட்டத்தின் இறுதியாட்டத்தில் மிகவும் வலிமை வாய்ந்தவையாகும். அதிலும் குறிப்பாக மற்ற காய்கள் பின்புலமாக பாதுகாத்து நின்றால் எதிரியின் நிலை கவலைக்கிடமாகிவிடும். ஏனெனில், அவர் தன்னுடைய படையில் உள்ள ஏதவதொரு காயை கண்டிப்பாகத் தியாகம் செய்ய வேண்டிய அவசியத்தை உண்டாக்கிவிடுகின்றன. இல்லாவிட்டால் அவை கடைசி கட்டத்திற்கு முன்னேறி தன் நிலையை உயர்த்திக் கொள்ளுதலை தடுக்க முடியாமல் போகும்.
பொதுவாக, மற்ற எதிரியில்லாச் சிப்பாய்களைவிட இணைக்கப்பட்ட எதிரியில்லாச் சிப்பாய்கள் மிகவும் பலம் மிக்கவையாகும். வெவ்வேறு வண்ணங்களில் அமைச்சர்கள் எஞ்சியிருக்கும் இறுதியாட்டங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆகும். ஓர் அமைச்சரும் இரண்டு சிப்பாய்களுக்கு எதிராக ஒரு வேறு வண்ண சிப்பாயும் எஞ்சியுள்ள ஆட்டத்தில், இணைக்கப்பட்ட சிப்பாய்கள் வெற்றி வாகை பெற்றுத்தரும் என்று சொல்வதற்கில்லை. இணைக்கப்பட்ட சிப்பாய்கள் இருந்தாலும் அவை ஐந்தாம் நிலைக்கு மேல் தாண்டியிருக்காவிட்டால் ஆட்டம் சமநிலையில் முடியவே வாய்ப்பு உள்ளது. ஆனால், இத்தகைய சூழலில் பிரிந்திருக்கும் சிப்பாய்கள் வெற்றியை ஈட்டித்தந்துவிடுகின்றன.
அடுத்த வரிசையில் நட்புச்சிப்பாய்கள் இல்லாமல் ஒரேதரத்தில் இரண்டு இணைக்கப்பட்ட சிப்பாய்கள் இருப்பதை தொங்கும் சிப்பாய்கள் என்பர்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
ஆறாம் தரத்திற்கு இரண்டு இணைக்கப்பட்ட எதிரியில்லாச் சிப்பாய்கள் முன்னேறிவிட்டால் அவை யனையைவிட வலிமையானவை என்று சொல்லுவார்கள். இந்த வார்த்தைகள் உண்மையானவை. எதிரியிடத்தில் யானையிருந்தும், அவரால் இணைக்கப்பட்ட எதிரியில்லாச் சிப்பாய்களை எதிர்கொள்ள முடியாமல், ஆட்டம் தோல்வியில் முடிவதை அருகில் உள்ள படத்தின் மூலம் உணரலாம். வெள்ளை வெற்றி பெறுகிறது.
கண்டிப்பாக இரண்டு சிப்பாய்களில் ஒன்று தன் நிலையை உயர்த்திக் கொள்ளும்.