இணையக் கோடல்

இணையக் கோடல் என்பது, ஓர் இணையச் சேவை வழங்கி, இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ இயக்கிகளையோ வேற்றுமையான தரத்திலும் விலைகளிலும் வழங்க இடம்தரும் இணைய சமத்துவத்தின் எதிர் கொள்கை. பென்ன் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியரான ராப் ஃப்ரீட்மேன் இச்சொல்லாடலை உருவாக்கினார். தரவு பாகுபாடு, பிணைய மேலாண்மை உள்ளிட்டவை இக்கொள்கையோடு தொடர்புடைய பதங்கள்.