பூ மொட்டுகளில் அமையும் சிலவகை அல்லி, புல்லி இதழமைவுகளின் விளக்கப்படம். A: ஐங்கூம்பிதழ்; B: சுருட்டிதழ், C. அகல்சுருட்டிதழ்; D: சுழலிதழ்; E: தொடுவிதழ்; F: திறந்தவிதழ்.
இதழமைவு (Aestivation - botany) என்பது மலர் மலர்வதற்கு முன்உள்ள மொட்டு நிலையில் மலரின் பாகங்களின் அமைப்பு நிலைகளை குறிப்பதாகும். சில சமயங்களில் இதழமைவினை பிரஃபோலியேஷன் அல்லது பிரிஃபோலியேஷன் எனவும் குறிப்பிடலாம். ஆனால் இவ்வார்த்தைக்கு இதழமைப்பு எனவும் அர்த்தம் கொள்ளலாம்: அதாவது தண்டு மொட்டுக்களில் இலைகள் அமைந்துள்ள அமைப்பைக் குறிப்பதாகும்.
தாவர வகைப்பாட்டியலில் தாவரங்களை இனம் காணும்போது இதழமைவு முதன்மை பங்காற்றுகிறது; எடுத்துக்காட்டாக, மால்வேசி குடும்ப மலர் மொட்டுக்களில், தவிர, மால்வேசிக் குடும்பத்தில்புல்லி இதழ்கள் தொடு இதழமைவு கொண்டுள்ளன; இருப்பினும் மால்வேசிக் குடும்பத்தில் ஃபெர்மாண்டோடென்ட்ரான், கைராந்தோடென்ட்ரான் போன்ற பேரினங்கள் தவறி வைக்கப்பட்டுள்ளன.
இதழமைவு என்ற ஒரே வார்த்தையை, தாவரங்களில் இலைகளின்அமைவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. [1] இதழமைவின் வகைகளை உள்ளடக்கியது:
தழுவிதழ் – ஒன்றுடன் ஒன்று தழுவி அமைந்தது
ஒழுங்கற்ற திருகு அல்லது திருகமைவு – ஒவ்வொரு அல்லி இதழ் அல்லது புல்லி இதழின் ஒரு முனை, பக்கத்திலுள்ள இதழின் ஒரு முனைக்கு வெளிப்புறமாகவும், மற்றொரு முனை பக்கத்திலுள்ள இதழின் மறுமுனைக்கு உட்புறமாகவும் அமைந்தது.
அகல் சுழலிதழ்(காக்லியேட்) – சுருள் வடிவில் திருகி அமைந்தது
சுழல் மடிப்பிதழ்(கன்டார்டிபிளிகேட்) – முறுக்கிய மேலும் மடிப்புள்ளதாக அமைந்தது
ஐங்கவையிதழ்(குவின்கன்ஸியல்) – ஐந்து இதழ்களில், இரண்டு அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் மற்ற எல்லாவற்றிற்கும் வெளியே உள்ளன, அடுத்த இரண்டு இதழ்கள் எல்லாவற்றிற்கும் உள்ளே உள்ளன, மற்றும் ஐந்தாவது இதழின் ஒரு விளிம்பு வெளிப்புறமாகவும் மற்றொரு விளிம்பு உட்புறமாகவும் அமைந்துள்ளது
ஒழுங்கற்ற சுழல் இதழ்
குறுக்கு மறுக்கு இதழ்
உள் மடிந்த இதழ் – உள் புறமாக மடிந்து அமைந்தது
திறந்த இதழ் – அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் ஒன்றுடன் ஒன்று தழுவாத அல்லது ஒன்றுக்கொன்று தொடாமலும் அமைந்தது
மறுஇரட்டித்தல் – வெளிப்புறமாக மடிந்து அமைந்தது
தொடு இதழ் – அடுத்தடுத்த அல்லி இதழ்கள் அல்லது புல்லி இதழ்கள் இதழ்கள் ஒன்றையொன்று தழுவாமல் தொட்டுக் கொண்டிருக்கும்.