இந்தர் சிங் நம்தாரி (Inder Singh Namdhari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1964 ஆம் ஆண்டில் பொறியியல் படித்து பட்டம் பெற்றார். சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2]
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சார்க்கண்டு மாநிலத்தின் முதல் சபா சபாநாயகராகவும் இருந்தார்.[3] தெற்கு பீகாருக்கு தனி மாநிலம் கோரிய வனாச்சல் மாநில இயக்கத்தின் முக்கிய தலைவராக இவர் இருந்தார்.[4]