இந்தர் மல்கோத்ரா (Inder Malhotra 1, பிப்பிரவரி, 1930–11, சூன், 2016) இதழாளர், செய்தித்தாள் ஆசிரியர் மற்றும் நூலாசிரியர் ஆவார்.[1]
பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற இந்தர் மல்கோத்ரா பத்திரிக்கைத் துறையில் நுழைந்தார். 1965-1971 ஆண்டுகளில் தி ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையில் ஆசிரியராகவும், 1965 முதல் 1978 வரை தி கார்டியன் என்ற செய்தித்தாளில் செய்தித் தொடர்பாளராகவும், 1978 முதல் டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியராகவும் இருந்தார்.
முன் ஓய்வு பெற்ற பிறகு 1986 முதல் பல்வேறு செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் இவருடைய கட்டுரைகள் இடம்பெற்றன.
இந்தர் மல்கோத்ரா இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சில நூல்களையும் எழுதி வெளியிட்டார்.[2]