மதிப்பு | ₹20 |
---|---|
Mass | 8.54 g |
விட்டம் | 27 mm |
முனை | 12-முனை பல்கோணம் (பன்னிருகோணம்) |
Composition | வெளி வளையம் – நிக்கலும் வெள்ளியும் மையம் – நிக்கல்-பித்தளை |
Years of minting | 2019 | – முதல்
Obverse | |
Reverse | |
இந்திய 20 ரூபாய் நாணயம் (Indian 20-rupee coin) என்பது இந்திய ரூபாயின் ஒரு முகமதிப்பாகும். 2019 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியாவில் மிக உயர்ந்த மதிப்புள்ள சுழற்சி நாணயமாக 20 ரூபாய் நாணயம் உள்ளது. இந்த நாணயம் பொது மக்கள் பயன்பாட்டுக்காக 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட்-19 ஊரடங்கு காரணமாக இதே ஆண்டு மே மாதம் வெளியிடுவதென மாற்றப்பட்டு இதர புதிய ரூபாய் நோட்டுகளுடன் வெளியிடப்பட்டது. தற்போது காகித 20 ரூபாய் தாளுடன் சேர்த்து இந்த 20 ரூபாய் நாணயமும் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
இப்புதிய 20 ரூபாய் நாணயம் பன்னிரு கோணங்கள் கொண்ட ஒரு பல்கோண நாணயமாகும்.[3] இரண்டு நாணயங்களை ஒன்றிணைத்தது போன்ற தோற்றத்தில் இரண்டு நிறங்களில் இந்நாணயம் வெளியிடப்படுகிறது.[4] மேலும் நாணயம் 27 மில்லிமீட்ட வெளிப்புற வளைய விட்டமும் 8.54 கிராம் எடையும் கொண்டுள்ளது. 65 சதவீதம் தாமிரம், 15 சதவீதம் துத்தநாகம் மற்றும் 20 சதவீதம் நிக்கல் என்ற இயைபில் நாணயத்தின் வெளிவளையமும், உள்வளையம் அதாவது மையத்துண்டு 75 சதவீதம் தாமிரம், 20 சதவீதம் துத்தநாகம் மற்றும் 5 சதவீதம் நிக்கல் என்ற இயைபிலும் தயாரிக்கப்படுகிறது. அகமதாபாத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவன மாணவர்களின் உதவியுடன் இந்த நாணயம் வடிவமைக்கப்பட்டுள்ளது. [5][6]
கீழ் பகுதியில் “சத்யமேவ ஜெயதே” என்று பொறிக்கப்பட்ட புராணக்கதை கொண்ட அசோக தூணுடன் இடது புற எல்லையில் இந்தி மொழியில் “பாரத்” என்ற சொல்லும், வலது எல்லையில் ஆங்கிலத்தில் “இந்தியா” என்ற சொல்லும் பொறிக்கப்பட்டு உள்ளது.
நாணயத்தின் முகம் “20” என்ற முகமதிப்பைக் கொண்டிருக்கிறது. இம்முகமதிப்புக்கு மேலே ரூபாய் சின்னம் காட்சியளிக்கிறது. இந்தியாவின் விவசாய அம்சத்தை சித்தரிக்கும் வகையில் நாணயத்தின் இடது புற எல்லையில் தானியங்களின் வடிவமைப்பும், மேல் வலது மற்றும் கீழ் வலது எல்லைகளில் இந்தி மொழியில் ரூ 20 என்ற சொல்லும், ஆங்கிலத்தில் ரூ 20 என்ற என்ற சொல்லும் காட்சியளிக்கின்றன. பன்னாட்டு எண் முறையில் நாணயத்தின் தயாரிப்பு ஆண்டு இடது எல்லையின் மையமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)