இந்திய ஆற்றல் கொள்கை (energy policy of India) வளர்ந்துவரும் மின் பற்றாக்குறையை[3] எதிர்கொள்ளும் வகையிலும் மாற்று ஆற்றல் மூலங்களை வளர்க்கும் வகையிலும்[4] வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக அணு ஆற்றல், சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான முனைவுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.[5]
இந்தியாவின் மின்சார உற்பத்தியில் ஏறத்தாழ 70% புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பெறப்படுகிறது; இதில் நிலக்கரி 40% ஆக முன்னிலையிலும் அடுத்ததாக பாறை எண்ணெய் 24%ஆகவும் இயற்கை எரிவளி 6% ஆகவும் உள்ளன.[3] பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் இறக்குமதியையே நம்பியுள்ளது. 2030ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஆற்றல் நுகர்வில் 53%க்கும் கூடுதலாக இறக்குமதியை நாடியிருக்க வேண்டி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.[3] 2009-10இல் 159.26 மில்லியன் டன் பாறை எண்ணெயை இறக்குமதி செய்தது; இது உள்நாட்டு பாறை எண்ணெய்ப் பயன்பாட்டில் 80% ஆகும். மேலும் நாட்டின் மொத்த இறக்குமதிகளில் 31% எண்ணெய் இறக்குமதியாகும்.[3][6] இந்தியாவின் மின்சார உற்பத்தியின் வளர்ச்சி உள்நாட்டு நிலக்கரித் தட்டுப்பாட்டால் தடைபட்டுள்ளது.[7] இதனால் 2010இல் மின் உற்பத்திக்கான இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 18%ஆக உயர்ந்துள்ளது.[8]
விரைவாக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்தின் மின்தேவையை சந்திக்க ஆற்றல் துறையில் பெரும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் உலகளாவிய ஆற்றல் தேவையில் இரண்டாம் பெரும் சந்தையாக உள்ளது. உலகளாவிய மின் உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 18%ஆக உள்ளது.[5] வளர்கின்ற மின்தேவையையும் புதைபடிவ எரிமங்களின் பற்றாக்குறையையும் கருத்தில் கொண்டு புதுப்பிக்கத்தக்க மற்றும் அணு மின் நிலையங்களில் தனது குவியத்தை செலுத்தி உள்ளது. காற்றுத் திறன் சந்தையில் உலகின் ஐந்தாமிடத்தில் உள்ளது.[9] 2022இல் 20 கிலோவாட் சூரிய மின் உற்பத்தித் திறனை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.[5] இந்தியாவின் மின் உற்பத்தியில் அணு மின்நிலையங்களின் பங்கை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் தற்போதைய 4.2%இலிருந்து 9%ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.[10] நாட்டில் ஐந்து அணு மின் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.2025க்குள் மேலும் 18 அணு மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன.[11]
மொத்த நிறுவப்பட்ட திறனளவு (சூன் 2015)[12]
வளம் | மொத்த திறனளவு (MW) | விழுக்காடு |
---|---|---|
நிலக்கரி | 164,635.88 | 61.51 |
புனல் மின்சாரம் | 41,267.43 | 15.42 |
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் | 31,692.14 | 12.70 |
எரிவளி | 23,062.15 | 8.61 |
அணு | 5,780.00 | 2.16 |
எண்ணெய் | 1,199.75 | 0.44 |
மொத்தம் | 267,637.35 |
துறை | மொத்த திறனளவு (MW) | விழுக்காடு |
---|---|---|
மாநில அரசுத்துறை | 96,963.20 | 36.23 |
நடுவண் அரசுத் துறை | 72,521.16 | 27.10 |
தனியார் துறை | 98152.99 | 36.67 |
மொத்தம் | 267,637.35 | . |
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)