![]() | |
நிறுவுகை | 2004 |
---|---|
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முதன்மை நபர்கள் | முனைவர். சுபோ ராய், தலைவர் [1] |
இணையத்தளம் | Official Website |
இந்திய இணையதளம் & அலைபேசி கழகம் (IAMAI) இந்திய சங்கங்கள் சட்டம், 1986-இன் படி பதிவு செய்யப்பட்ட ஆதாய நோக்கமற்ற தொழில்சேவை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள இணையதளம் மற்றும் அலைபேசி பயனீட்டாளர்களின் மதிப்புக் கூட்டுச்சேவைகளை மேம்படுத்துவதும், விரிவிபடுத்துமே இக்கழகத்தின் தலையாய நோக்கமாகும்.[2][3] மேலும் இந்திய இணையதளம் மற்றும் அலைபேசி நிறுவனங்களின் தேவைகளையும், குறைகளையும் மற்றும் சேவை மேம்பாடுகளையும் பயனீட்டாளர்களுக்கும், நிறுவன பங்குதாரர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே பகிர்ந்து கொள்வதற்கும் இக்கழகம் ஒரு பாலமாக விளங்குகிறது.[4]
இந்தியாவில் இந்நிறுவனமே, இணையதள மற்றும் அலைபேசி மதிப்புக் கூட்டுச் சேவையில், இணையதள மற்றும் அலைபேசி நிறுவனங்களுக்கும், பயனீட்டாளர்களுக்கும் மற்றும் அரசுக்கிடையே சிறப்பு பெற்ற பிரதிநிதியாக திகழ்கிறது.[5]