இந்திய இரத்தக் குழு அமைப்பு

இந்திய இரத்தக் குழு அமைப்பு (Indian blood group system-In) என்பது இரத்த அணுக்களின் மேற்பரப்பில் வெளிப்படுத்தப்படும் சிடி44 மூலக்கூறில் உள்ள பரம்பரை பிறபொருளெதிரியாக்கி இருப்பு அல்லது இல்லாமையின் அடிப்படையில் செய்யப்படும் குருதி வகைப்பாடு ஆகும்.[1] இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 4% பேர் இதனைக் கொண்டிருப்பதால் இதற்கு இப்பெயரிடப்பட்டது.[2] பெரும்பாலான நபர்களின் சிடி44-ன் 46வது இடத்தில் உள்ள அர்ஜினின் அமினோ அமில எச்சத்தின் விளைவாக Inb பிறபொருளெதிரியாக்கி வெளிப்படுகிறது. Ina இரத்த வகையானது இதே நிலையில் அர்ஜினினுக்குப் பதிலாக புரோலின் கொண்டிருப்பதால் ஏற்படுவதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A blood group-related polymorphism of CD44 abolishes a hyaluronan-binding consensus sequence without preventing hyaluronan binding". J. Biol. Chem. 271 (12): 7147–53. March 1996. doi:10.1074/jbc.271.12.7147. பப்மெட்:8636151. 
  2. "Red Cell Antigens - Fun Facts, Questions, Answers, Information". Fun Trivia. Archived from the original on 2015-03-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-03.