இந்திய இராணுவச் சமிக்கைகள் படை | |
---|---|
செயற் காலம் | 1911 – தற்போது வரை |
நாடு | ![]() |
கிளை | ![]() |
தலைமையிடம் | புது தில்லி, இந்தியா |
சுருக்கப்பெயர்(கள்) | சமிக்கை வீரர்களின் படை |
குறிக்கோள்(கள்) | விரைவு மற்றும் எச்சரிக்கை |
சண்டைகள் | |
தளபதிகள் | |
கர்ணல், சமிக்கைப் படைகளின் கட்டளைத் தளபதி | லெப்டினண்ட் ஜெனரல், படையணியின் தலைவர் |
இந்திய இராணுவச் சமிக்கைகள் படை (Indian Army Corps of Signals), இந்தியத் தரைப்படையின் அங்கமாகும். இச்சமிக்கைப் படையினர் தரைப்படையினரின் தகவல் தொடர்புக்கு ரேடியா சமிக்கைக் கருவிகளை இயக்குவதற்கு பொறுப்பானவர்கள். இப்படையணியின் தலைவர் லெப்டினண்ட் ஜெனரல் மற்றும் கட்டளைத் தலைவர் ஒரு கர்ணல் பதவி தரத்தில் உள்ளார்.இப்படையணி 1911ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது இந்தியத் தரைப்படையின் கீழ் இயங்கும் ஒரு படையாகும்.
இந்தியத் தரைப்படையினரின் தகவல் தொடர்பு வலைதளத்தை உருவாக்குதல், நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் ஆகும். தற்போது செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, சைபர் செயல்பாடுகள் மற்றும் மின்னணு போர் வரை வளர்ச்சியடைந்துள்ளது. அனைத்து பருவ நிலைகளிலும் பாதுகாப்பான மற்றும் திறமையான தகவல்தொடர்புகளை பராமரிக்க இந்திய இராணுவத்திற்கு உதவுகிறது. அனைத்து மட்டங்களிலும் உள்ள படைத்தலைவர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ள முடியும் என்பதை இப்படை உறுதி செய்கிறது. இது செயல்பாடுகள் போரின் வெற்றிக்கு முக்கியமானது.
இப்படையானது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மென்பொருளை உருவாக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் பாரத் மின்னணுவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.[1][2]
இப்படைப்பிரிவின் துருப்புக்களுக்கு ஜபல்பூர் நகரத்தில் உள்ள இராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரியில் பயிற்சி வழங்கப்படுகிறது.