இந்திய ஊதுபை தவளை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | உ. குளோபுலோசசு
|
இருசொற் பெயரீடு | |
உபெரோடான் குளோபுலோசசு (குந்தர், 1864) |
உபெரோடான் குளோபுலோசசு (Uperodon globulosus) அல்லது இந்திய ஊதுபை தவளை (Indian balloon frog), என்பது இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் காணப்படும் குறுகிய வாய்த் தவளை சிற்றினமாகும்.[2] இது இந்தியக் கோளத் தவளை, சாம்பல் ஊதுபை தவளை மற்றும் பெரிய ஊதுபை தவளை போன்ற பல பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள் விவரிக்கப்படாத ஒரு சிற்றினத்தைக் குறிக்கலாம்.[3]
உபெரோடான் குளோபுலோசசு தோற்றத்தில் மிகவும் தடிமனாக இருக்கிறது. இதன் நெருங்கிய உறவினர் உபெரோடோன் சிசுடோமாவை விடவும் இது பெரியது. இதன் உடல் நீளம் 76 மி.மீ. வரை வளரக்கூடியது.[4] இது காடுகள் மற்றும் விவசாய நிலங்களில் காணப்படும் ஒரு புதைந்து வாழக்கூடிய உயிரியாகும்.[1]