நிறுவப்பட்டது | 1969 |
---|---|
தலைமையகம் |
|
தலைவர் | பேராசிரியர் பூசன் பட்வர்தன்[1] |
உறுப்பினர் செயலாளர் | பேராசிரியர் வீரேந்திரகுமார் மல்கோத்ரா[2] |
வலைத்தளம் | icssr |
இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (Indian Council of Social Science Research) இந்தியாவில் சமூக அறிவியல் ஆராய்ச்சியை மேற்பார்வையிடும் ஒரு தேசிய அமைப்பாகும். இவ்வமைப்பு 1969 ஆம் ஆண்டு புது தில்லியில் நிறுவப்பட்டது.[3]:{{{3}}}
தற்போது பூசன் பட்வர்தன் தலைமையில் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தற்பொழுது செயல்படுகிறது. தீனா பந்து பாண்டே, பி. கனகசபாபதி, பேராசிரியர்சஞ்சய் குமார், எச். எசு. பேடி, அரீசு சந்திர சிங் ரத்தோர், பஞ்சனன் மொகந்தி, அமிதா சிங், சாமாதேவி சங்கர்ராவ் கோப்ரகடே, டி. சுப்ரமணியம் நாயுடு, ராகேசு சின்கா, அசுவினி மொகபத்ரா, பி.வி. கிருட்டிண பட்டா, சாந்திசிறீ துளிப்புடி பண்டிட்டு, இயே.கே. பசாச்சு, எம்.பி. பெசுபருவா, டி.டி. பட்டநாயக்கு, மற்றும் மது பூர்ணிமா கிசுவர் ஆகியோர் தற்போதைய உறுப்பினர்களில் அடங்குவர்.[4]
சமூக அறிவியல் துறைகளில் விரிவான ஆய்வுகளை மேம்படுத்த, இந்திய சமூக அறிவியல் ஆய்வுக் கழகத்திற்கு துணையாக இந்தியாவில் 27 ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. அவைகளில் சில [5]
கழகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் பெரும் பகுதி இதன் சொந்த நிர்வாகத்திற்காக செலவிடப்படுகிறது; 1996-1997 ஆம் ஆண்டில் கழகத்தின் மொத்த செலவில் 23% ஆக இருந்தது.[3]:{{{3}}} அதிகப்படுத்தப்பட்ட, கற்பனை செய்ய முடியாத மற்றும் திறமையற்ற அதிகாரத்துவம் என இச்செலவு விவரிக்கப்பட்டது.[3]:{{{3}}}