இந்தியாவில் நாணயங்கள் பொது வருடத்திற்கு முன்னான முதலாம் நூற்றாண்டிற்கும் பொதுவருடம் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையே தோன்றியது.[1] அதற்கும் முன்னர் மகாஜனபத நாடுகளான காந்தாரம், குந்தல தேசம், குருதேசம், பாஞ்சாலம், மகதம், சாக்கிய, சூரசேனம் மற்றும் செளராஷ்டிர[2] பேரரசுகள் தன் சொந்தப் பரிமாற்றத்திற்காக நாணயங்களை வெளியிட்டனர். இந்திய நாணயங்கள் மேற்காசிய நாணயங்களைப் போலல்லாமல் செம்பு மற்றும் வெள்ளி உலோகங்களில் முத்திரைகளுடன் உருவாக்கப்பட்டன. இவை கர்ஷ்பணாஸ் அல்லது பணா[3] என அழைக்கப்பட்டன. பொது வருடம் இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தோ இஸ்லாமிய[1] மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசு[4] காலகட்டத்திலும் நாணய முறைகள் உருவாகின.
இந்தியாவில் முதலில் சோழிகள் பண்ட மாற்றிற்காக நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டன.[5] நிலையான எடையுடைய வெள்ளி போன்ற உலோகங்கள் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டதை சிந்து சமவெளி நாகரீக ஆதாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.[6][7] மொஹென்ஜோதரோ கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் முத்திரையுடன் இருந்தன என மேலும் அவற்றின் எடைகளுக்கிடையேயும் ஒற்றுமை இருந்தன என வரலாற்றாய்வாளர் டி.டி. கோசாம்பி தெரிவிக்கிறார். சிந்து பகுதியில் கண்டெடுக்கப்பட்டவையும் முத்திரையுடன் காணப்பட்டன.
நாணயங்களின் எடை குன்றிமுத்து விதைகளால் அளக்கப்பட்டன. 0.11 அல்லது 0.12 கிராம் எடையுடய குன்றி முத்துகளின் எடையை அடிப்படை அலகாகக் கொண்டு நாணயங்கள் 1:2:4:8:16:32 ஆகிய விகிதங்களில் உருவாக்கப்பட்டன.
1 சதமனா = 100 குன்றிமுத்துகள் / 11 கிராம் தூய வெள்ளி
1 கர்ஷபனா = 32 குன்றிமுத்துகள் / 3.3 கிராம் தூய வெள்ளி
½ கர்ஷபனா = 16 குன்றிமுத்துகள்
½ கர்ஷபனா (மாஷா) = 8 குன்றிமுத்துகள்
1/8 கர்ஷபனா = 4 குன்றிமுத்துகள்
வேத காலத்திலிருந்து பரிமாற்றத்திற்கு விலைமதிப்பற்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ரிக்வேதத்தில் நிஷ்கா என இது குறிக்கப்படுகிறது. தங்கத்திற்கு ஈடாக பசுவினை பரிமாற்றம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கால் பங்கினை பாதா எனும் சொல்லாலும் நூறு என்பதை ஸ்தாமனா (1 ஸ்தாமனா = 100 குன்றிமுத்து மணிகள்) என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சொற்கள் வரலாற்றுக் காலத்தில் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை பானினியின் இலக்கண உரையில் காணலாம். ஒரு நிஷ்காவின் மதிப்புள்ள ஒன்றை நைஷ்கா என்றும், ஒரு சடாமாவின் மதிப்புள்ள ஒன்று " சடாமனம்" என்றும் அவர் குறிப்பிடுகிறார். நைஷ்கா -அதிகா அல்லது நைஷ்கா - சஹஸ்ரிகா (நூறு நிஷ்காக்கள் அல்லது ஆயிரம் மதிப்புள்ள ஒன்று) எனவும் இலகியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்தும் முதலில் தங்கத்திற்கு ஈடாகக் கொள்ளப்பட்டு அதன் பின்னான காலங்களில் வெள்ளிக்கு ஈடாகக் கருதப்பட்டன.[8][9] குன்றிமுத்துகள் அடிப்படையிலான அளவீட்டு என்பது இந்திய துணைக் கண்டத்தின் மிகப் பழமையான அளவீட்டு முறையாகும். சிந்து சமவெளி நாகரிகத்தின் மிகச்சிறிய எடை 8 குன்றிமுத்துகளுக்கு சமமாக இருந்தது. மேலும் கிமு ஏழாம் நூற்றாண்டில் முதல் இந்திய நாணயங்களுக்கான எடை தரத்திற்கான அடிப்படையாக குன்றிமுத்துகள் இருந்தன. குன்றிமுத்துகள் இன்றும் இந்தியாவின் சில பகுதிகளில் தங்கம் விற்பனையில் எடைக்கற்களாகக் கருதப்படுகிறது.[10]
பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, தெற்காசியாவில் முதல் நாணயங்கள் கிமு 400 இல் ஆப்கானிஸ்தானில் வெளியிடப்பட்டன, பின்னர் அவை துணைக் கண்டத்திற்கு பரவின.[11] இந்திய நாணயங்களின் தோற்றம் குறித்து அறிஞர்கள் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர்[12], இருப்பினும், மெளரிய சாம்ராஜ்யத்திற்கு (பொ.வ.மு 322–185) முன்னர் இந்தியாவில் உலோக நாணயம் அச்சிடப்பட்டது.[13][14] சில அறிஞர்களின் கூற்றுப்படி, மேற்கு ஆசியாவிலிருந்து இந்தோ-கங்கை சமவெளிக்கு நாணயங்கள் பரவின.
சில அறிஞர்கள் பண்டைய இந்தியாவில் ஏராளமான தங்கமும் கொஞ்சம் வெள்ளியும் இருந்தது என்று கூறுகிறார்கள். இந்தியாவில் புழங்கிய தங்கத்திற்கும் வெள்ளிக்குமான விகிதம் 10:1 அல்லது 8:1 ஆகும். வரை இருந்தது. இதற்கு மாறாக, அண்டை நாடான பெர்சியாவில் இது 13:1 வரை இருந்தது. இந்த மதிப்பு வேறுபாடு வெள்ளிக்கான தங்க பரிமாற்றத்தை ஊக்குவித்திருக்கும், இதன் விளைவாக இந்தியாவில் வெள்ளி வழங்கல் அதிகரித்தது.[15]
கிரேக்க மற்றும் ஈரானிய நாணயங்களுக்கிடையேயான உறவின் மூலம் இந்தியா நாணயங்களில் முத்திரையிடும் வழக்கம் உருவானது. குறிப்பாக கிரேக்க நாணயங்களின் தாக்கம் இந்திய நாணயங்களின் முத்திரையிடலில் இருந்தது.[16]
உலகின் முதல் நாணயங்களில் சிலவற்றை இந்தியா உருவாக்கியிருக்கலாம், ஆனால் எந்த நாணயம் முதலில் எப்போது உருவாக்கப்பட்டது என அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. கிழக்கு இந்தியாவின் கீழ் கங்கை பள்ளத்தாக்கில் சுமார் பொவமு 600 ல் முத்திரையிடப்பட்ட கர்ஷபனா என்ற நாணயம் உருவாக்கப்பட்டது.[17][18] ஹார்டேக்கரின் கூற்றுப்படி, இந்திய நாணயங்களின் தோற்றம் பொ.வ.மு. 575 இல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.[19] பி.எல். குப்தாவின் கூற்றுப்படி, நாணயங்கள் பொவமு 1000 முதல் பொவமு 500 வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்.[20] காசி, கோசலா மற்றும் மகதா நாணயங்கள் பொவமு 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்திய துணைக் கண்டத்தில் இருந்தன. கோசாம்பி, பொவமு 7 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாணயம் புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்கிறார். ஜனபதங்கள், சாக்கியர்கள் காலகட்டங்களில் வெள்ளி மற்றும் தங்கத்திலான நாணயங்கள் உருவாக்கப்பட்டன.[21]
இந்த நாணயங்களின் ஒப்பீட்டு காலவரிசை பற்றிய ஆய்வுகள் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு முத்திரைகளை மட்டுமே கொண்டிருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன. காலப்போக்கில் முத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் முதல் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் பொவமு 6 ஆம் நூற்றாண்டில் இந்தோ-கங்கை சமவெளியின் மகாஜனபாதாக்களால் அச்சிடப்பட்டிருக்கலாம். இந்த காலத்தின் நாணயங்கள் புராணங்கள், பழைய கர்ஷபனாக்கள் அல்லது பனா என அழைக்கப்பட்டன. இந்த நாணயங்களில் திமிலுடைய காளையின் முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. வெள்ளியால் செய்யப்பட்ட இவை ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தன.
பாண்டு ராஜர் திபி எனும் தொல்லியல் இடத்திலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய வெண்கல நாணயம் ஒரு பழமையான மனித உருவத்தைக் கொண்டுள்ளது.[22] தொல்பொருள் ஆய்வாளர் ஜி சர்மா அவரது பகுப்பாய்வு அடிப்படையில் இந்நாணயங்கள் பொவமு 855 மற்றும் பொவமு 815 கி.மு. இடையேயான வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு காலத்தினைச் சார்ந்ததாக இருக்கும் என்கிறார்.[23] மேலும் இது பொவமு 500 என்றும், சிலர் பொவமு 7 ஆம் நூற்றாண்டின் வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடு காலத்திற்கு முந்தியது எனவும் கருதுகின்றனர்.[24][25][26] தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் இந்த நாணயங்கள் காலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.[27]
மெளரியப் பேரசு காலத்தில் நாணயங்கள் இயந்திரங்கள் மூலம் அச்சடிக்கப்படதால் முத்திரை நாணயங்கள் வழக்கொழிந்தன.[28] இயந்திரங்கள் இந்தியாவினுடையதாக இருந்தாலும் அதன் தொழிநுட்பமுறை அகாமனிசியப் பேரரசு அல்லது கிரேக்க பாக்திரியா பேரரசுகளிலிருந்து பெறப்பட்டிருகலாம் எனக் கருதுகின்றனர்.[29]
இந்தியாவின் முதல் அச்சு நாணயங்கள் செளராஷ்டிரர்களால் பொவமு 450 - பொவமு3 00 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவை இந்துப் பண்பாட்டினை வெளிப்படுத்துபவையாக அமைந்திருந்தன. அவற்றின் எடை ஒரு கிராமாக இருந்தது. பெரும்பாலான நாணயங்கள் பழைய நாணயங்களின் மீது அச்சு செய்ததாக உள்ளது, இதனால் பழைய அச்சின் எச்சம் இந்நாணயங்களில் காணப்படுகிறது.[30]
பொவமு நான்காம் நூற்றாண்டில் தக்சசீலா மற்றும் உஜ்ஜைன்யில் செம்பு மற்றும் வெள்ளியாலான அச்சு நாணயங்கள் புழக்கத்திலிருந்தன. இந்நானயங்களில் முந்தைய முத்திரை நாணயங்களின் சின்னங்கள் கவனமாக அச்சு செய்யப்பட்டது.[26]
தக்கசீலாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வில் தங்க நாணயங்கள் கிடைத்தன.[31][32] இவை கால் தங்க நாணயக்கள் என அழைக்கப்பட்டன. இவற்றின் பொதுவான எடையாகவும் கொள்ளப்பட்டது. அர்த்தசாஸ்திரம் இத்தங்க நாணயங்களின் எடை 80 குன்றி முத்துகள் எனக் குறிப்பிடுகிறது.
மெளரியப் பேரரசின் நாணயங்கள் அவற்றின் நம்பகத்தன்மைக்காக உயர் தரத்துடன் உருவாக்கப்பட்டன.[33] அர்த்தசாஸ்த்திரம் நாணயங்கள் அச்சடிபப்தைப் பற்றி குறிப்பிடுகிறது.மேலும் மெளரிய அரசின் தரத்தை மீறி தனிநபர்கள் கள்ளத்தனமாக நாணயம் அச்சடிப்பதைக் குற்றமென்கிறது.[33]
மெளரியப் பேரரசின் நாணய முறை |
|
மெளரிய அரசு தாமிரம் மற்றும் வெள்ளி உலோகங்களை நாணயங்கள் அச்சடிக்கப்பயன்படுத்தியது. அசோகரின் பிரமி எழுத்துகளுடன் கூடிய செப்பு நாணயங்கள் பொவமு இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் தக்காணப் பகுதிகளில் இருந்தன.[35][36]
'கிரேக்க நாணயங்கள் |
|
இந்தோ-கிரேக்க மன்னர்கள் கிரேக்க வகை நாணயஙகளை அறிமுகப்படுத்தினர். இதன்படி இந்திய நாணயத்தில் உருவப்படத் தலை அறிமுகப்படுத்தப்பட்டது.[37] அவை அதன் பின்னர் எட்டு நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டது. ஒவ்வொரு நாணயத்திலும் ஆட்சியாளரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.[37] அதன்படி நாணயங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இவை வெள்ளியா மற்றும் செப்பால் செய்யப்பட்ட சதுர வடிவிலான நாணயங்கள்.இவற்றில் கிரேக்க எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். பொ.வ.மு முதலாம் நூற்றாண்டில் இந்தோ கிரேக்க நாணயங்கள் இந்தியாவில் புழங்கத் தொடங்கியதும், இந்திய அரசர்களும் நாணயங்களை வெளியிடத் தொடங்கினர். இவை பிராகிருதத்தில்[1] வெளியிடப்பட்டன. குஷாணர்கள், குப்தர்கள் மற்றும் காஷ்மீர் அரசர்கள் நாணயங்கள் வெளியிட்டனர்.[1] இந்தியாவுடனான ரோமானிய வர்த்தகத்தின் ஆரம்ப காலத்தில், மியோஸ் ஹார்மோஸிலிருந்து இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 120 கப்பல்கள் வரை பயணம் செய்தன.[38] இந்த வர்த்தகத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நாணயங்கள், குஷான் பேரரசால் தங்கள் சொந்த நாணயங்களாக மறுசுழற்சி செய்யப்பட்டன. பொ.வ. 1 ஆம் நூற்றாண்டில், ரோமானிய எழுத்தாளர் பிளினி இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தகம்மானது குறிப்பாக குஜராத்தின் பிராந்தியங்களை மையமாகக் கொண்டு நடந்தது. மேலும் தென்னிந்தியாவில் இந்திய தீபகற்பத்தின் முனையில் ரோமானிய நாணயங்களின் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[39] குறிப்பாக தென்னிந்தியாவின் பரபரப்பான கடல் வர்த்தக மையங்களில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. தென்னிந்திய மன்னர்கள் ரோமானிய நாணயங்களை தங்கள் பெயரில் மீண்டும் வெளியிட்டனர்.[40]
பொ.வ.மு 200 முதல் பொ.வ 400 வரையிலான இந்தோ-சித்தியர்கள் காலத்தில், சகர்கள் மற்றும் பகலவர்கள் வம்சங்களின் புதிய நாணயங்கள் அப்போதைய இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய மற்றும் வடக்கு தெற்காசியாவின் சில பகுதிகளிலும் (சோக்டியானா, பாக்திரியா, அரச்சோசியா, காந்தாரா, சிந்து, காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பீகார்)பரவலாக இருந்தது.[37] மியூஸ் எனும் இந்தோ சிந்திய அரசரின் வெள்ளி நாணயங்கள் பஞ்சாபில் மட்டுமே குறைந்த அளவு காணப்பட்டன. இவற்றில் இரண்டு குதிரைகள் பூட்டிய தேரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் இவரது பொதுவான செப்பு நாணாயத்தில் தும்பிக்கையை தூக்கிய யானையின் தலை உருவம் கழுத்தில் மணியுடன்[41] பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு செப்பு சதுர நாணயத்தில் ராஜா குதிரையின் மீது அமர்ந்திருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
பொ.வ.மு 100-200 காலப்பகுதியில் கனிஷ்காவின் செப்பு நாணயங்கள் இரண்டு வகைகளாக வெளியிடப்பட்டன. அதில் "நிற்கும் ராஜா" உருவம் நாணயத்தின் பின்புறம் பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு அரிதான இரண்டாவது நாணயத்தில் ராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். ஏறக்குறைய அதே நேரத்தில் வெளியிடப்பட்ட ஹுவிஷ்காவின் செப்பு நாணயமும் இதிலிருந்து வேறுபட்டது. அதில், (1) யானை மீது சவாரி செய்வது, அல்லது (2) ஒரு படுக்கையில் சாய்ந்துகொள்வது, அல்லது (3) குறுக்குக் காலுடன் அமர்ந்திருப்பது அல்லது (4) ஆயுதங்களை உயர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சித்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
குப்தப் பேரரசின் நாணயங்கள் |
|
குப்தா சாம்ராஜ்யம் ஏராளமான தங்க நாணயங்களை வெளியிட்டது. அதில் குப்தா மன்னர்கள் பல்வேறு சடங்குகளைச் செய்வதை சித்தரிக்கும் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அதே போல் வெள்ளி நாணயங்களும் ஆளுநர்களின் உருவங்களைக் கொண்டு வெளியிடப்பட்டன.[1]
குப்தர்களின் தங்க நாணயங்கள் மற்றும் அவர் காலத்திய சமஸ்கிருதக் கல்வெட்டுகள் ஆகியவை இந்தியக் கலையின் ஆகச் சிரந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.[37] குப்தர்களின் சகாப்தம் பொ.வ.மு 320 இல் சந்திரகுப்தா I அரியணையில் நுழைவதுடன் தொடங்குகிறது.[37] சந்திரகுப்தா I இன் மகன் சமுத்திரகுதர் குப்தா பேரரசின் உண்மையான நிறுவனர்ஆவார். இப்வர் தங்க நாணயங்களை மட்டுமே வெளியிட்டார்.[37] அவரது ஆட்சிக் காலத்தில் ஏழு வெவ்வேறு வகையான நாணயங்கள் வெளியிடப்பட்டன.[37] அவற்றில் வில்லாளன் வகை குப்தா வம்ச நாணயங்களின் மிகவும் பொதுவான மற்றும் சிறப்பியல்பு வகையாகும், அவை குறைந்தது எட்டு அடுத்தடுத்த மன்னர்களால் குப்தவெளிடப்பட்டு இராச்சியத்தில் ஒரு நிலையாக இருந்தன.[37]
குப்தார்களின் வெள்ளி நாணயம் இரண்டாம் சந்திரகுப்தாவால் பழைய நாணயங்களுக்கு பதிலாக வெளியிடப்பட்டது. குமரகுப்தா மற்றும் ஸ்கந்தகுப்தா ஆகியோர் பழைய வகை நாணயங்களைத் (கருடன் மற்றும் மயில் வகைகள்) தொடர்ந்தது மட்டுமல்லாமல் மேலும் சில புதிய வகைகளையும் அறிமுகப்படுத்தினர்.[37] செப்பு நாணயங்கள் பெரும்பாலும் சந்திரகுப்தர் II சகாப்தத்துடன் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன, மேலும் வடிவமைப்பில் அவை மிகவும் அசலாக இருந்தன. அவரால் வெளியிடபட்டதாக அறியப்பட்ட ஒன்பது வகைகளில் எட்டில் கருடனின் உருவமும் அதில் ராஜாவின் பெயரும் உள்ளன. தங்க நாணயங்கள் புழகத்தால் வெள்ளி நாணயங்கள் புழக்கத்திலிருந்து மறைந்தன.[37] குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களில் சுத்தத் தங்கத்தின் அளவு 90% ஆக சந்திரகுப்தர் (319–335) காலத்திலும் 75% - 80% ஸ்கந்தகுப்தர் காலத்திலும் (467) இருந்தது. இது அவர்களது பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்கிறது.
இந்தோ சாசானிய நாணயங்கள் |
|
கூர்ஜர தேசம், கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு, பரமாரப் பேரரசு, பாலப் பேரரசு, சோலாங்கிப் பேரரசு ஆகியோர் ஒழுங்கான வடிவமைப்புடன் நாணயங்களை வெளியிட்டனர்.இவ்வகை நாணயங்களில் அரசர் எளிமையாக இரு உதவியாளர்களுடன் பலிபீடத்துடன் இருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.[42][43]
சோழ சாம்ராஜ்யத்தின் நாணயங்கள் மற்ற தென்னிந்திய வம்ச வெளியீட்டு நாணயங்களுடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளன. சோழ நாணயங்கள் புலியின் உருவம் பொறிக்கப்பட்டவை.பாண்டியர்கள் மற்றும் சேரர்களுடன் கொண்ட தொடர்பின் காரணமாக சோழர்கள் வெளியிட்ட நாணயங்களில் மீன் மற்றும் வில் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். இது அரசியலைக் கைப்பற்றுவதையும் நாணயங்களை மாற்றாமல் ஒத்திசைந்து செல்வதையும் குறிக்கும்.[44]
இந்துஸ்தான் மற்றும் மத்திய இந்தியாவில் பல்வேறு ராஜபுத்திர இளவரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பொதுவாக தங்கம் அல்லது தாமிரத்தால் ஆனவை. மிகவும் அரிதாகவே வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட்டன. இந்த நாணயங்களில் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. குப்தர் நாணயங்களின் வழக்கமான இரண்டு கரங்களுடன் இருந்த லக்ஷ்மி உருவம் ராஜ்புத் நாணயங்களில்விட நான்கு கரங்களுடன் பொறிக்கப்பட்டது. தலைகீழ் நகரி புராணத்தை சுமந்தது. உட்கார்ந்த நிலையில் காளை மற்றும் குதிரைவீரன் ஆகிய உருவங்கள் ராஜ்புத்திரர்களின் தாமிரம் மற்றும் பொன் நாணயங்களில் மாறாமல் காணப்பட்டது.[37]
நாணயங்கள் வெளியிட்ட பெண் ஆட்சியாளர்களுள் இப்வரும் ஒருவராவார்.
அலாவுதீன் கில்ஜி இரண்டாவது அலெக்ஸாண்டர் எனப் பொருள்படும் சிக்கர்ந்தர் சைனி எனும் வாசகங்களுடன் அப்பாசியக் கலீபகத்தினைத் தவிர்த்து நாணயங்களை வெளியிட்டார். சைனி எனும் அரபுச் சொல்லிற்கு இரண்டாவது எனும் பொருள். சிக்கந்தர் என்பது வெற்றியாளரைக் குறிக்கும்.
டெல்லி சுல்தான் முஹம்மது பின் துக்ளக் பித்தளை மற்றும் செம்பு நாணயங்களை வெளியிட்டார். இவை தங்க நாணயத்தின் மதிப்பிற்கு நிகராகக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். வரலாற்றாசிரியர் ஜியாவுதீன் பரானி, துக்ளக் உலகின் அனைத்து மக்கள் வசிக்கும் பகுதிகளையும் இணைக்க விரும்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். துக்ளக் அதிக அளவு தங்கத்தினை மக்களுக்கு வெகுமதியாக வழங்கியதால் அரசின் கருவூலம் தீர்ந்துவிட்டதாகவும் பரணி எழுதியிருந்தார். இந்த சோதனை தோல்வியுற்றது, ஏனென்றால் இந்து குடிமக்களில் பெரும்பாலோர் பொற்கொல்லர்கள், எனவே அவர்களுக்கு நாணயங்களை தயாரிப்பது எப்படி என்று தெரியும். எனவே அவர்கள் அதிக அளவு போலி நாணயங்களை உருவாக்கினர். அந்நாணயங்களை ஆயுதங்களையும், குதிரைகளையும் வாங்க பயன்படுத்தினர். இதன் விளைவாக, நாணயங்களின் மதிப்பு குறைந்து. நாணயங்கள் கற்களைப் போல பயனற்றவை ஆனது என சதீஷ் சந்திரா எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார்.
விஜய நகரப் பேரரசின் நாணயமுறை மிகவும் சிக்கலானதாகும். அப்பேரரசின் மறைவிற்குப் பின்னரும் அந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் வெளியிட்ட பகோடா நாணயத்தில் வராகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் அடிப்படை அலகு 3.4 கிராம் தங்கமாகும்.
முகலாய அரசர் பாபர் ஷாருகி எனும் நாணயங்களை வெளியிட்டார். தைமூரின் மூத்த மகன் ஷா ருக் நினைவாக ஷாருகி என இந்நாணயத்திற்கு ஷாருகி எனப் பெயர் சூட்டினார். நாணயத்தில் ஒருபுறம் கலீபாக்களையும் மறுபுறம் அரசரின் பெயரும், ஹிஜ்ரி வருடமும், அச்சடிக்கப்பட்ட நகரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். பாபரின் வாரிசான ஹூமாயூனும் இம்முறையிலேயே நாணயங்களை வெளியிட்டார்.
தற்கால ரூபாயின் முன்னோடி ஷெர் ஷா சூரி அறிமுகப்படுத்தப்பட்ட நாணயங்கள் ஆகும். இவர் காலத்திற்கும் முன்னர் வெளியிட்ட வெள்ளி நாணயங்கள் ரூப்யா என அழைக்கப்பட்ட போதும் இவர் வெளியிட்ட 178 கிராம் நிலையான எடைகொண்ட வெள்ளி நாணயங்கள் மட்டுமே ரூப்யா என அழைக்கப்பட்டன.
அக்பர் வெளியிட்ட நாணயங்களில் வெளியிட்ட தேதி எண்களால் எழுதப்படாமல் எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயங்களில் "அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர்" எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நூற்றாண்டினைக் குறிக்க நானயங்களில்ஆல்ஃப் எனும் சொல் பயன்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு முன்னரே ஹிஜ்ரி 990 களிலேயே ஆல்ஃப் சொல் பொறிக்கப்பட்டது.
ஜஹாங்கிர் தேதியை விளக்குவதற்காக பல்வேறு இராசி அறிகுறிகளின் உருவங்களுடன் நாணயங்களை வெளியிட்டார். மேலும் கையில் ஒரு கோப்பை மதுவுடன் தன்னைப் பற்றிய உருவப்படங்களையும் வெளியிட்டார். இஸ்லாத்தில் உயிருள்ளவர்களின் பிரதிநிதித்துவம் தடைசெய்யப்பட்டதால் இந்நாணயங்கள் இஸ்லாமிய மதகுருக்களை கோபப்படுத்தியது. இந்த நாணயங்கள் ஷாஜகானின் காலத்தில் உருகப்பட்டன, ஒரு சில மாதிரிகள் மட்டுமே இன்று எஞ்சியுள்ளன.
1674 இல் அரியணையில் ஏறிய சத்ரபதி மகாராஜ் சிவாஜி தலைமையில் மராட்டியர்கள் சக்திவாய்ந்தவர்களாக மாறினர். மராட்டியர்கள் ஆண்ட பகுதி பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த பரந்த பிரதேசமாக மாறியது. மராட்டியர்கள் சிவ்ராய் எனும் நாணயங்களை வெளியிட்டனர். நாணயத்தின் ஒருபுறம் தேவநாகரியில் 'ஸ்ரீ ராஜா சிவ்' எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயத்தின் மறுபுறம் தேவநகரில் சத்ரபதி எனப் பொறிக்கப்பட்டிருந்தது. நாணயங்கள் தாமிரத்தில் அச்சடிக்கப்பட்டன. சிவ்ராய் ஹான் என்று அழைக்கப்படும் தங்க நாணயங்களும் மிகக் குறைந்த அளவில் புழக்கத்திலிருந்தன.
ஹைதராபாத் மாநிலம் வெளியிட்ட ரூபாய் நாணயங்களில் சார்மினார் இடம்பெற்றது.
திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட நாணயங்களில் ஆங்கிலம் ஒருபுறமும் மறுபுறம் மலையாள எழுத்துகளும் பொறிக்கப்பட்டன. மலையாள நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவை ஃபனம், சக்கரம், காசு என வழங்கப்பட்டன.
1 திருவிதாங்கூர் ரூபாய் = 7 ஃபனம் |
1 ஃபனம் = 4 சக்கரம் |
1 சக்கரம் = 16 காசு |
பரோடா மாநிலம் மராட்டியர்கள் பலவீனமடைந்த பின்னர் உருவானது. கெய்க்வாட்டுகள் முதல் பரோடா நாணயங்களை வெளியிட்டனர். இவை மராட்டிய முறையில் அமைந்திருந்தன. வெளியிடுபவரின் (அரசர்) பெயர் இந்நாணயங்களில் பொறிக்கப்பட்டிருந்தது. 1857 ஆம் ஆண்டிற்குப் பின்னர் நாணயங்களின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. இந்நாணயங்கள் கைகளால் உருவாக்கப்பட்டன. பாரசீக மற்றும் நகரி மொழிகளில் வெளியிடப்பட்டன. இவற்றில் கெய்க்வாட்டுகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய ஒன்றியம் முந்தைய ஏகாதிபத்திய பிரித்தானிய மன்னர்களின் படங்களுடன் நாணயங்களை தக்க வைத்துக் கொண்டது.
ஜனவரி 26, 1950 அன்று, இந்தியா இறையாண்மை கொண்ட குடியரசாக மாறி பின்னர் ஆகஸ்ட் 15, 1950 இல் புதிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பன. இவைகுடியரசு இந்தியாவின் முதல் நாணயத்தை குறிக்கிறது. பிரித்தானிய மன்னரின் உருவப்படத்திற்குப் பதில் அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்டது.
{{cite book}}
: |work=
ignored (help)