சுருக்கம் | IOS |
---|---|
உருவாக்கம் | 1965 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை பகுதி | இந்தியா |
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
தலைவர் | பல்வீந்தர் சிங் |
பொதுச்செயலாளர் | சஞ்சய் லாப் |
மைய அமைப்பு | பல் |
வலைத்தளம் | www |
இந்தியப் பல்மருத்துவ சங்கம் (Indian Orthodontic Society) என்பது பல் மருத்துவர்களுக்கான தொழில்முறை சங்கமாகும். இது 1965-ல் இந்தியாவின் மும்பையில் தொடங்கப்பட்டு இந்திய தொழில்முறை சட்டம் 1992-ன் கீழ் தமிழ்நாட்டின் வேலூரில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாகும்.
இந்தியப் பல்மருத்துவ சங்கம் தனது முதல் ஆண்டு மாநாட்டை 1967-ல் புது தில்லியில் நடத்தியது. இந்தியப் பல்மருத்துவ சங்க ஆய்விதழ் முதல் ஆசிரியர் எச். டி. மெர்ச்சண்டால் மாநாடு தொடங்கப்பட்டது. சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார். நைஷாத் பரிக் நிறுவன செயலாளராகவும் பொருளாளராகவும் இருந்தார். மற்ற நிறுவன உறுப்பினர்கள் ஏ.பி. மோடி, கேகி மிஸ்ட்ரி, மோகன்தாசு பட், பிரேம் பிரகாசு மற்றும் மறைந்த ஹெச்எஸ் சேக்.
இந்த சங்கம் 1999-ல் இந்தியப் பல்மருத்துவ வாரியத்தை நிறுவியது. இது இந்தியாவில் பல் மருத்துவத் துறையில் முதல் மற்றும் உலகில் மூன்றாவது வாரியமாகும்.[1] பல் மருத்துவ முதுநிலை கல்வியினை முடித்த பிறகு ஐந்து வருட அனுபவமுள்ள உறுப்பினர்களை ஆய்வு செய்ய வாரியம் நிறுவப்பட்டது. இந்தியப் பல்மருத்துவ சங்கம் 1995-ல் உலக பல்மருத்துவ கூட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறியது.