உருவாக்கம் | நவம்பர் 3, 1958 |
---|---|
வகை | தனியார் கல்வி வாரியம் |
தலைமையகம் | புதுதில்லி, இந்தியா |
தலைமையகம் |
|
ஆட்சி மொழி | ஆங்கிலம் |
வலைத்தளம் | cisce.org |
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (Council for the Indian School Certificate Examinations (சுருக்கமாக CISCE))ஒரு தேசியவளவிலான, தனியார் இந்திய கல்வி வாரியம் ஆகும்.[1] இது மேல்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (the Indian School Certificate (ISC) Examination), உயர்நிலை வகுப்புத் தேர்வுகளையும் (The Indian Certificate of Secondary Education (ICSE) Examination) நடத்துகிறது.[2] இந்த சபை 1958ல் நிறுவப்பட்டது.[3][4][5]
1952ல் இந்தியாவின் கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத் தலைமையில், கேம்பிரிட்ஜ் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்குப் பதில் இந்திய நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வு அமைப்பினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது, இதன் விளைவாக இந்த சபையை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த சபையினால் நிர்வகிக்கப்படும் கல்வித்திட்டங்களின் கீழே செயற்படும் 89 தனியார் பள்ளிக்கூடங்கள் தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் உள்ளது. [6]