வகை | ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1971 |
பணிப்பாளர் | பேராசிரியர் ஏ. பி. திமிரி [1] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | http://www.iigm.res.in |
இந்தியப் புவி காந்தவியல் நிறுவனம் (Indian Institute of Geomagnetism) என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். இந்த நிறுவனம் புவி காந்தவியலுடன் புவி இயற்பியல், வளிமண்டல இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் மற்றும் அயனிமம் இயற்பியல் ஆகியவற்றில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.[2] இந்த நிறுவனம் தற்போது 12 காந்த கண்காணிப்பு பகுதிகளுடன் இயக்குகிறது.[3] இந்திய அண்டார்டிக் திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கிறது.[4]
இந்த நிறுவனம் 1971-ல் கொலாபா ஆய்வகத்தின் வாரிசாக உருவாக்கப்பட்டது. அசல் கண்காணிப்பு நிலையம் 1826-ல் நிறுவப்பட்டது. அதன் முதல் இயக்குநராக பிஎன் பார்கவா 1971 இல் நியமிக்கப்பட்டார், மேலும் 1979 வரை இந்தப் பதவியிலிருந்தார்.
இந்த நிறுவனம் சப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள வெஸ்டர்ன் கேப் பல்கலைக்கழகம் மற்றும் தைவானில் உள்ள தேசிய அறிவியல் குழுமத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது.[5] இது புவி காந்தவியல்[6] எனும் உலக தரவு மையத்தை நிறுவியுள்ளது. இது அலைமருவி மற்றும் எண்ணிம புவி காந்த தரவுகளின் விரிவான தொகுப்புகளையும், அத்துடன் உலகளாவிய காந்த கண்காணிப்பு வலையமைப்பிலிருந்து வழங்கப்பட்ட புவி காந்த செயல்பாட்டின் குறியீடுகளையும் பராமரிக்கிறது.
இந்திய புவி காந்தவியல் நிறுவனம் பாயக்கண்டறி காந்தஅளவியினை உருவாக்கியுள்ளது.[7]
இந்தியப் புவி காந்தவியல் நிறுவனம் புவி காந்தவியல் மற்றும் திட பூமி, மேல் வளிமண்டலம் மற்றும் கண்காணிப்பு தரவு பகுப்பாய்வு தொடர்பான ஆய்வுகள் தொடர்பாக முனைவர் பட்டப்படிப்பை வழங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு மாணவர்கள் இதன் தலைமையகம் மற்றும்/அல்லது பிராந்திய மையங்களில் (திருநெல்வேலி, அலகாபாத் மற்றும் சில்லாங்) ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம். இந்தியன் புவி காந்தவியல் நிறுவனம் முனைவர் பட்டத்திற்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மையமாகும். குறிப்பிட்ட பாடங்களில் பின்வரும் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் வழங்கப்படுகிறது. மும்பை பல்கலைக்கழகம் (இயற்பியல்), சிவாஜி பல்கலைக்கழகம், கோலாப்பூர் (இயற்பியல்), வடக்கு மகாராட்டிரா பல்கலைக்கழகம், ஜல்கான் (இயற்பியல், பயன்பாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல்), எசு. ஆர். டி. எம். பல்கலைக்கழகம், நாந்தேட் (புவி இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல்), ஆந்திரப் பல்கலைக்கழகம், விசாகப்பட்டணம் (இயற்பியல்), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (புவி இயற்பியல்) திருநெல்வேலி.
முனைவர் பட்ட மேலாய்வு: நானாபோய் மூசு ஆராய்ச்சி உதவித் தொகை என்பது இந்தியப் புவி காந்தவியல் நிறுவனம், புவி காந்தவியல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் அடிப்படை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மையான ஆராய்ச்சி நிதியுதவியாகும். இந்த ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக இளம் மற்றும் அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ள திறமையானவர்களை இந்த நிறுவனம் இதன் மூலம் ஈர்க்க முடிந்தது. இந்த நிறுவனத்தில் பல்வேறு அறிவியல் துறைகளில் அறிவியல் திறமைகளை மேலும் செழுமைப்படுத்தவும் உருவாக்கவும் இந்த நிதியுதவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
{{cite web}}
: Missing or empty |title=
(help)