இந்திய பைசா (Indian paisa) (plural: paise) என்பது இந்திய ரூபாயில் 1⁄100 (நூறில் - ஒரு பங்கு)ஆகும். இந்திய ரூபாயை தசம எண்ணிக்கையில் சீர்திருத்தம் செய்த 1957 ஏப்ரல் 1 அன்று பைசா அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சூன் 30 அன்று 50 பைசா நாணயத்தைத் தவிர பிற பைசா நாணயங்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.[சான்று தேவை]
1955 ஆம் ஆண்டில், இந்திய அரசு "இந்திய நாணயச் சட்டத்தில்" திருத்தம் கொண்டுவந்து "நாணயங்களை மெட்ரிக் முறையில்" மாற்றியது. 1957 ஆம் ஆண்டு முதல் 1964 வரை, பைசாவானது "நயா பைசா" (புதிய பைசா) என அழைக்கப்பட்டது. 1964 சூன் 1, அன்று "நயா" என்ற சொல் கைவிடப்பட்டு "பைசா" என்று பெயரிடப்பட்டது. பைசாவானது 1, 2, 3, 5, 10, 20, 25 மற்றும் 50 பைசா நாணயங்களில் புழங்கப்பட்டது.
1957 க்கு முன்னர், இந்திய ரூபாயானது தசமபடுத்தப்படமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாவும் மூன்று இந்திய தம்பிடிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1][2]
பணத்தொகுதி | மதிப்பு | துவக்கம் | முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|
ஒரு இந்திய ரூபாய் | பதினாறு இந்திய அணா | 1835 | 1947 | |
1947 | 1950 | The Frozen Series | ||
1950 | 1957 | அணா தொடர் | ||
நூறு பைசாக்கள் | 1957 | 1964 | நயாபைசா தொடர் | |
1964 | தற்போதுவரை | 50 பைசா தவிர அனைத்து பைசா, அணா, தம்பிடி நாணயங்கள் செல்லாதவை ஆக்கப்பட்டன. | ||
ஓர் இந்திய அணா | நான்கு பைசாக்கள் | 1835 | 1947 | |
1947 | 1950 | The Frozen Series. | ||
1950 | 1957 | அணா மற்றும் தம்பிடி 1957 இல் செல்லவாதவையாக்கப்பட்டன. | ||
ஓர் இந்திய தம்பிடி | மூன்று பைசாக்கள் | 1835 | 1947 | 1947 இல் தம்பிடி செல்லாததாக்கப்பட்டது. |
ஓர் இந்திய ரூபாய் = 100 பைசா = 16 அணா = 64 பைசா = 192 தம்பிடி.[1] |
நயாபைசா தொடர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
மதிப்பு | தொழில்நுட்ப அளவுருக்கள் | விளக்கம் | காலகட்டம் | நாணய நிலை | ||||||
எடை | விட்டம் | தடிமன் | உலோகம் | முனை | முகப்புப்பக்கம் | பின்பக்கம் | முதல் | கடைசி | ||
1 நயா பைசா |
1.5 கி | 16 மிமீ | 1 மிமீ | வெண்கலம் | இயல்பான | இந்திய தேசிய இலச்சினை மற்றும் நாட்டுப் பெயர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் |
மதிப்பு மற்றும் ஆண்டு. | 1957 | 1962 | செல்லாததாக்கப்பட்டது.[3] |
2 நயா பைசா |
2.95 கி | 18 மிமீ | 1.80 மிமீ | செம்பு நிக்கல் கலவை | வழுவழுப்பான | 1957 | 1963 | செல்லாததாக்கப்பட்டது.[4] | ||
5 நயா பைசா |
||||||||||
10 நயா பைசா |
||||||||||
20 நயா பைசா |
||||||||||
50 நயா பைசா |
பைசா - அலுமினியம் தொடர் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
மதிப்பு | தொழில்நுட்ப அளவுருக்கள் | விளக்கம் | காலகட்டம் | நாணய நிலை | ||||||
எடை | விட்டம் | கனபரிமாணம் | உலோகம் | முனை | முகப்புப்பக்கம் | பின்பக்கம் | முதல் | கடைசி | ||
1 பைசா | 0.75 கி | 17 மிமீ | 1.72 மிமீ | அலுமினியம் | வழுவழுப்பான | இந்திய தேசிய இலச்சினை மற்றும் நாட்டுப் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். |
மதிப்பு மற்றும் ஆண்டு. | 1965 | 1981 | செல்லாதாக்கப்பட்டது.[5] |
2 பைசா | 1.0 கி | 20 மிமீ | 1.58 மிமீ | செல்லாதாக்கப்பட்டது.[6] | ||||||
3 பைசா | 1.2 கி | 21 மிமீ | 2.0 மிமீ | 1964 | 1971 | செல்லாதாக்கப்பட்டது.[7] | ||||
5 பைசா | 1.5 கி | 22.0 மிமீ | 2.17 மிமீ | இந்திய தேசிய இலச்சினை நாடு மதிப்பு மற்றும் ஆண்டு. |
ஆண்டு மற்றும் "Save for development" வாசகம். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நினைவு வெளியீடு. |
1977 | 1977 | செல்லாதாக்கப்பட்டது.[8] | ||
10 பைசா | 2.27 கி | 25.91 மிமீ | 1.92 மிமீ | இந்திய தேசிய இலச்சினை மற்றும் நாட்டுப் பெயர் இந்தி ஆங்கிலத்தில். |
மதிப்பு மற்றும் ஆண்டு. | 1971 | 1982 | செல்லாதாக்கப்பட்டது.[9] | ||
20 பைசா | 2.2 கி | 26 மிமீ | 1.7 மிமீ | 1982 | 1997 | செல்லாதாக்கப்பட்டது.[10] | ||||
10 பைசா | ||||||||||
20 பைசா | ||||||||||
25 பைசா | ||||||||||
50 பைசா |