சுருக்கம் | CCIM |
---|---|
உருவாக்கம் | 1971 |
தலைமையகம் | |
சேவை பகுதி | இந்தியா |
தாய் அமைப்பு | ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யூனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி (ஆயூஷ்), |
வலைத்தளம் | CCIM |
இந்திய மருத்துவ மத்திய மன்றம் (Central Council of Indian Medicine)(சி.சி.ஐ.எம்) என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சின் கீழ் செயல்படும் சட்டரீதியான ஒழுங்குமுறை அமைப்பாகும். இது 1971இல் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டத்தின் கீழ் (சட்டம் 48) 1970 இல் நிறைவேற்றப்பட்டது. ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம் மற்றும் சோவா-ரிக்பா உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளில் உயர் கல்வியைக் கண்காணிப்பது பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) ஆணையத்தின் (யுஜிசி) கீழ் உள்ள நிபுணத்துவ சபைகளில் ஒன்றாகும்.[1][2][3]
இந்த மன்றம் இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ளது.[4] இந்திய மருத்துவ முறைகளில் பின்பற்ற வேண்டிய வரையறைகளையும் நடைமுறைகளையும் பரிந்துரைக்க இம்மன்றம் தோற்றுவிக்கப்பட்டது.[5] ஆயுர்வேதம், சித்தா மற்றும் யூனானி திபியா முறைகளில் கல்வியினை பட்டதாரி மற்றும் முதுகலை நிலைகளில் ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ளது.