வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1961 |
தலைமையகம் | புது தில்லி ஐதராபாத் குர்கான் ரிசிகேசு |
உற்பத்திகள் | மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள் |
இணையத்தளம் | Official website |
இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Indian Drugs and Pharmaceuticals Limited (IDPL) என்பது இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை மருந்து நிறுவனமாகும். இது மருந்து உற்பத்தி மற்றும் மருந்து கண்டுபிடிப்பு செய்வதாற்காக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இது புது தில்லியைத் தலைமையிடமாக்கொண்டும், மற்றும் ஐதராபாத், குர்கான், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் ஆலைகளை அமைந்துள்ளது.[1][2] இந்நிறுவனம், மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்துடன் இணைந்து மலிவு விலையில் மருந்துகள் வழங்க காப்புரிமை வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது, மற்றும் அண்மையில் இது தன்னிச்சையாக மூன்று மருந்துகளை வெளியிட்டுள்ளது.[3][4] 1979 ஆம் ஆண்டு இந்நிறுவனம் லாபம் ஈட்டியது. அதற்குப் பிறகு இறங்குமுகம்தான். 2013-14 ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் நஷ்டம் ரூ.171 கோடியாகும். விற்பனை வருமானம் ரூ. 60 கோடியாகும். இந்நிலையில் 2016 திசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழு இந்தியாவில் மொத்தம் உள்ள 5 அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வருவாயின்றி இயங்கும் நான்கு நிறுவனங்களை மூடிவிட ஒப்புதல் அளித்துள்ளது. மூட ஒப்பதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் நிறுவனமும் அடங்கும். [5]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)