இந்திய மேலாண்மைக் கழகம் திருச்சிராப்பள்ளி (ஆங்கில மொழி: Indian Institute of Management Tiruchirappalli) இந்திய அரசாங்கத்தால் பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஏழு இந்திய மேலாண்மை நிறுவனங்களுள் ஒன்று.[1] ஜனவரி 4, 2011 அன்று தொடங்கிய ஐஐஎம் திருச்சி நாட்டின் பதினோராவது இந்திய மேலாண்மை கழகமாகும்.[2][3] இந்திய மேலாண்மை கழகம் பெங்களூருவின் வழிகாட்டுதலின் கீழ் ஐஐஎம் திருச்சியின் 2011-2013 தொகுப்புக்கான வகுப்புகள் ஜூன் 15ல் தொடங்கின[4]
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சியில் தற்காலிகமாக இயங்கிய ஐஐஎம் திருச்சி அக்டோபர் 2017இல் தன்னுடைய நிரந்தர வளாகத்திற்கு மாறியது. இவ்வளாகம் திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இடையே உள்ள 200 ஏக்கரில் (நகரிலிருந்து 17 கி.மீ தொலைவிலும் திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 12 கி.மீ தொலைவிலும்) அமைந்துள்ளது. [7]
ஐஐஎம் திருச்சியில் இரண்டாண்டு முழு நேர முதுகலை பட்டம் வழங்கப்படுகின்றது. இதன் முக்கிய நோக்கம் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை தகுதி வாய்ந்த தொழில்முறை மேலாளர்களாகவும் எந்த துறையிலும் வேலை திறன் உடையவர்களாகவும் தலைமைப் பண்புடன் சிறந்த செயல்திறனும் உடையவர்களாகவும் மாற்றி சமூகத்தின் நலனுக்கு பங்களிப்பவர்களாக உருவாக்கவுவதாகும்.[8]