அமைவிடம் | அமர் கட்டடம், தரைத் தளம் சர் பிரோசாஹா மேத்தா சாலை கோட்டை (மும்பை வளாகம்) - 400001 |
---|---|
ஆள்கூற்று | 18°56′03″N 72°50′12″E / 18.934107°N 72.836547°E |
வகை | நாணயவியல், பொருளாதார வரலாறு |
சேகரிப்புகள் | பழங்கால சோகி, நாணயம், காகிதத்தாள் பணம், நிதிச்சேவை |
சேகரிப்பு அளவு | 1,500 |
உரிமையாளர் | இந்திய ரிசர்வ் வங்கி |
பொது போக்குவரத்து அணுகல் | சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் சர்ச்கேட் தொடருந்து நிலையம் |
இந்திய ரிசர்வ் வங்கி நாணய அருங்காட்சியகம் (RBI Monetary Museum) அல்லது இந்திய ரிசர்வ் வங்கி பண அருங்காட்சியகமானது மும்பையின் கோட்டையில் உள்ள ஓர் அருங்காட்சிகமாகும். இது இந்தியாவின் பணத்தின் பரிணாம வளர்ச்சியை காட்சிப்படுத்துவதை உள்ளடக்கியது. ஆரம்பகால பண்டமாற்று முறை மற்றும் காகிதப் பணம், நாணயங்கள், பங்குச் சந்தை மற்றும் நவீன மின்னணு பரிவர்த்தனைகள் வரை காட்சிப்படுத்துகிறது.[1]
ரிசர்வ் வங்கி நாணய அருங்காட்சியகம் அருங்காட்சியகம் 2004ஆம் ஆண்டில் இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கி கல்வி திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது. மேலும் இதனை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ஆ. ஜெ. அப்துல் கலாம் திறந்து வைத்தார்.[2] பொருளாதார வரலாறு மற்றும் நாணயவியல் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் அருங்காட்சியகம் இதுவாகும்.[3]
இந்த அருங்காட்சியகம் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் சேகரிப்பில், கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் மற்றும் சிந்து சமவெளி, குசாணாப் பேரரசு, குப்தர் காலம் மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பண்டைய காகிதப் பணம் ஆகியவை அடங்கிய சுமார் 1,500 பொருள்கள் உள்ளன.[4] அருங்காட்சியக அனுமதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.