भारतीय विधिज्ञ परिषद Bar Council of India | |
சட்டபூர்வமான அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1961 |
தலைமையகம் | புதுதில்லி |
சட்டபூர்வமான அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | barcouncilofindia |
இந்திய வழக்குரைஞர் கழகம் (Bar Council of India) இந்திய வழக்குரைஞர்கள் சட்டம், 1961இன் கீழ் அமைக்கப்பட்டது. சட்டபூர்வமான இக்கழகம் வழக்குரைஞர் தொழில் மற்றும் சட்டக் கல்வியை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. இந்திய வழக்குரைஞர் கழகத்தின் நிர்வாகிகள் இந்திய மாநிலங்களில் உள்ள வழக்குரைஞர் கழகத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இந்திய வழக்குரைஞர் சட்டம், 1961இன் படி, இந்திய மாநிலங்களின் வழக்குரைஞர் கழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு இந்திய வழக்குரைஞர் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் இந்திய தலைமைச் சட்ட வழக்குரைஞர் (Attorney General of India) மற்றும் இந்தியாவின் தலைமை சட்ட ஆலோசகர் (Solicitor General of India) ஆகியோர் அலுவல் சார்பான உறுப்பினர்களாக இருப்பார்கள். மாநிலங்களின் வழக்குரைஞர் கழக (Members from State Bar Council) உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள்.
இந்திய வழக்குரைஞர் கழகத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அகில இந்திய வழக்குரைஞர் தேர்வுக் குழு, மேற்பார்வைக் குழு வழக்குரைஞர்கள் நலக் குழு மற்றும் சட்ட உதவிக் குழுக்கள் வழக்குரைஞர் கழக்கத்திற்குத் தேவையான கருத்துக்களைக் கூறும்.
வழக்குரைஞர் கழகமானது செயற்குழு, சட்டக் கல்விக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு, வழக்கறிஞர்கள் நலக் குழு, சட்ட உதவிக் குழு சட்டக் கல்வி இயக்குநரகம் கொண்டுள்ளது.[1]
வழக்குரைஞர்களுக்கான தொழில் தர்மம், ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிகளை இக்கழகம் நிர்ணயம் செய்கிறது. மேலும் சட்டக் கல்விக்கான தர நிர்ணயம், சட்டக் கல்லூரிகள் வழங்கும் பட்டங்களை அங்கீகாரம் செய்தல், சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல், சட்டக் கல்வி முடித்த மாணவர்களை வழக்குரைஞர் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர தகுதிகளை நிர்ணயிப்பது, தவறு இழைக்கும் வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.[2].[3][4][5]
சட்டம் பயின்ற பட்டதாரிகள் இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வாதாட, இக்கழகம் நடத்தும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.[6][7]
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)