இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
---|---|
![]() | |
பொதுச் செயலாளர் | ஜெயந்த் பிரபாகர் பாட்டீல் |
தொடக்கம் | 3 ஆகத்து 1947[1] |
தலைமையகம் | அரசு குதிர், மந்திராலாயா எதிரில், வி.வி.சாலை, நரிமன் முனை, மும்பை, மகாராட்டிரம் |
இளைஞர் அமைப்பு | புரோகிமி யுவக் சங்கடனா |
தொழிலாளர் அமைப்பு | அகில இந்திய தொழிலாளர் தொழிற்சங்கம் |
கொள்கை | பொதுவுடைமை மார்க்ஸிஸம் - லெனினிசம் |
அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி |
இ.தே.ஆ நிலை | பதிவுசெய்யப்பட்ட கட்சி[2] |
கூட்டணி |
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிர சட்டமன்றம்) | 1 / 288
|
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மகாராட்டிர சட்டமன்ற மேலவை[5]) | 0 / 78
|
தேர்தல் சின்னம் | |
![]() | |
இந்தியா அரசியல் |
இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி (Peasants and Workers Party of India (PWP) என்பது இந்தியா மகாராட்டிராவில் உள்ள ஒரு மார்க்சிஸ்ட் அரசியல் கட்சி. இந்தக் கட்சி 1948 இல் நிறுவப்பட்டது, சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அதன் வேர்களைக் கொண்டுள்ளது மற்றும் சுமார் 10,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. கட்சியின் செல்வாக்கு பெரும்பாலும் மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி மஹாராட்டிராவில் புனே சேர்ந்த கேசவராவ் ஜேதே, சங்கரராவ் மோரே, மும்பை சேர்ந்த பவுசாகேப் ராவத், சதாரா சேர்ந்த நானா பாட்டீல், சோலாப்பூரைச் சேர்ந்த துல்ஷிதாஸ் ஜாதவ், பெல்காமைச் சேர்ந்த தாஜிபா தேசாய், கோலாப்பூரைச் சார்ந்த மாதவராவ் பாகல், அகமதுநகரைச் சேர்ந்த பி. கே. பாப்கர் மற்றும் தத்தா தேஷ்முக், வித்தலராவ் ஹண்டே மற்றும் பலர் மூலம் நிறுவப்பட்டது.[6][7] மஹாராஷ்டிராவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்த் பிரபாகர் பாட்டீல் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார்.[8] குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இக்கட்சிக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் மகாராஷ்டிராவில் ராய்காட், சோலாப்பூர், நாஷிக், நாக்பூர், நாந்தேட் மற்றும் பரபானி ஆகிய மாவட்டங்களில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2014 மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தனது 88ஆவது வயதில், கட்சியின் கணபத்ராவ் தேஷ்முக் சங்கோல் தொகுதியில் 94,374 வாக்குகள் பெற்று, சிவசேனா கட்சியின் சாஜிபாபு பாட்டிலை 25,224 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[9][10][11]